Tuticorin Crime: ஒரு தலைக்காதல்: அப்பாவி புதுமாப்பிள்ளை கொலை... காதலியை பழிவாங்க வெறிச்செயல்!
பெற்றோரின் தீவிர எதிர்ப்பைத் தாண்டி, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் கடுமையான சாதி அமைப்பு சார்ந்த ஆணாத்திக்க கொலைகள் தொடர்வதை உணர்த்துகிறது.
எட்டயபுரத்தில் டிவி பழுது பார்க்கும் கடையில் பணி செய்து வந்த ராகவனுக்கும், அந்த கடைக்குப் பக்கத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சி பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இந்த காதல் உறவை நிரந்தர வாழ்க்கையாக வடிவமைக்க ஆசைப்பட்டனர். வெவ்வேறு சாதி அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகப்பெரிய நெடிய போராட்டத்தை சந்திக்க நேரிட்டது. பெற்றோரின் தீவிர எதிர்ப்பைத் தாண்டி, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் ஏற்பட்டது.
இந்நிலையில், எட்டயபுரம் சோழபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது- 22) என்பவர் மகாலட்சுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக அறியப்படுகிறது. தனது விருப்பத்தை, மகாலட்சுமியிடம் எடுத்தும் கூறியுள்ளார். ஆனால், மகாலட்சுமி ராகவனுடனான தனது காதல் நிலைப்பாட்டைக் கூறி விளக்கியுள்ளார்.
இதை காதல் புறக்கணிப்பாக மட்டும் ஆனந்தராஜ் பார்க்கவில்லை. மாறாக, ஒரே சாதியைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை எப்படி காதலிக்கமுடியும் என்ற சாதிய வன்மமும் அவருக்கு இருந்தது. அதனால், இருவர் மீதும் அவருக்கு தீராப் பகை ஏற்பட்டது.
இதன் காரணமாக, சூரிய ராகவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி, பழுதான எல்.இ.டி. டிவி ஒன்றை சூரிய ராகவன் வேலை பார்க்கும் கடையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார். இதைதொடர்ந்து திட்டமிட்டபடி நேற்று திட்டமிட்டப்படி கடைக்குள் நுழைந்த அவர், ஒரு பையில் ஆடு வெட்டும் கத்தி, மிளகாய் பொடி ஆகியவற்றுடன் வந்துள்ளார். மிளகாய் பொடியை சூரியராகவன் முகத்தில் வீசி, கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். தலை துண்டான நிலையில், ரத்தவெறி பிடித்த வேங்கையாக அங்கிருந்து சென்றுள்ளார். எட்டயுபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த்ராஜை கைது செய்தனர். மிகக் கொடூரமாக நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
வைகோ மகனுக்கு பொறுப்பு... எதிர்ப்பு தெரிவித்து இளைஞரணி செயலாளர் ராஜினாமா!
Pig Kidney Transplant: பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்திய ஆய்வாளர்கள்