(Source: ECI/ABP News/ABP Majha)
நண்பனை அடித்து கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்! சிக்கிய நண்பர்கள்: ஏன்? எப்படி?
பொம்மிடி அருகே நண்பனை அடித்து கொலை செய்த நண்பனை காப்பாற்ற, விபத்து என நாடகமாடிய நண்பர்கள்-ஒருவர் கைது, மற்றொருவர் நீதிமன்றத்தில் சரண்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ஜங்காலஹள்ளியை சேர்ந்த மணிகண்டன் (35). கூலித் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன், கேசவன் ஆகிய நண்பர்களுடன் இணைந்து மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு மூன்று பேரும் சென்றுள்ளனர். அப்பொழுது ஒட்டுபள்ளம்- ஜங்காலஹள்ளி சாலையில் வந்துள்ளனர். அப்போது மணிகண்டனின் மற்றொரு நண்பர் அறிவழகன் என்பவர் வந்து மூவரையும் நிறுத்தி பேசியுள்ளார். அப்போழுது மணிகண்டனை பார்த்து, நீ செய்வது சரியில்லை என கேட்டுள்ளார். ஏற்கனவே மணிகண்டன், அறிவழகனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரிந்ததால், மணிகண்டன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
பின்னர் என் மனைவியுடன் ஏன் பழகுகிறாய்? எனக் மணிகண்டனை கேட்டுள்ளார். அப்பொழுது இருவருக்குமகடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில், அறிவழகன் இரும்பு கம்பியை எடுத்து, மணிகண்டனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்து, இரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அறிவழகன் மற்றும் மாயக்கண்ணன் ஆகியோர், மணிகண்டனை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் மணிகண்டன் கீழே விழுந்ததில், காயமடைந்ததாக கூறி, நாடகமாடி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் இவர்களுடன் மது அருந்த சென்ற கேசவன், மணிகண்டனை, அறிவழகன், மாயக்கண்ணன் இருவரும் தாக்கியாதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த மாயக்கண்ணன், அறிவழகன் இருவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் மணிகண்டனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் 30-ந் தேதி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் தலைமறைவான மாயக்கண்ணன், அறிவழகன் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து, ஈரோட்டில் பதுங்கி இருந்த மாயக்கண்ணனை தனிப்படை காவல் துறையினர் பிடித்து, பொம்மிடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தி,கைது செய்தனர். மேலும் இதனை அறிந்த அறிவழகன், காவல் பிடித்துவிட ஈழம் என்ற அச்சத்தில் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் நண்பனை அடுத்து கொலை செய்த நண்பனை காப்பாற்ற, விபத்து நடந்ததாக இரண்டு நண்பர்கள் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.