ஒரே நாளில் 2 வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - பரபரப்பு தீர்ப்பு
ஆரணியில் வெவ்வேறு வழக்கில் 2 குழந்தைகளை கொலை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி பகுதியில் வெவேறு வழக்கில் 2 குழந்தைகளை கொலைசெய்த 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி வளாகத்தில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த திலகவதி வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஓன்றியத்தை சேர்ந்த சின்னபாலபாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன்பு திருமாணமாகி சபரி (7) என்ற மகன் உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கார்த்தி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால் திலகவதி தன்னுடைய சகோதிரிகளான கவிதா (19) பாக்கியலட்சுமி (20) ஆகியோருடன் வேலூர் மாவட்டம் அரியூர் கிராமத்தில் தங்கி வசித்து வந்தார். திலகவதி மாந்தரீகத்தில் மிகவும் ஈடுபாடுடன் இருப்பவராக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய ஒரே மகன் சபரி(7) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அரியூர் கிராமத்திலிந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு ஆட்டோவில் செல்லும் போது ஆரணி அருகே உள்ள கண்ணமங்கல பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர் இரவு நேரம் என்பதால் 3 பெண்கள் மற்றும் குழந்தையை இறக்கி விட்டு சென்றுள்ளார்.
பேய் பிடித்தாக சிறுவனை கொலை செய்த தாய்
திடீரென சிறுவன் சபரியின் தலைமுடியை இழுத்தபடியே கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் சென்று தங்கினர். கண்ணமங்கல பேருந்துநிலையம் அருகில் உள்ள பேரூராட்சி அலுவலகம் அருகில் இரவு தங்கியுள்ளனர். இரவு நேரத்தில் சிறுவன் சபரிக்கு வலிப்பு வந்ததாகவும் தெரிகின்றது. ஆனால் கல்நெஞ்சம் படைத்த தாய் பேய் பிடித்துள்ளது இதனை விரட்டுவதற்காக தன்னுடைய 7வயது மகனின் கழுத்து மீது நின்று கொண்டு சிறுவனை தாய் மற்றும் 2 சித்திகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டான். சிறுவன் சித்திரவதை செய்வதை கண்டு அங்கிருந்த சிலர் 3 பெண்களிடம் தட்டி கேட்டுள்ளனர். அப்போது தட்டி கேட்ட பொதுமக்களை 3 பெண்களும் விரட்டியடித்துள்ளனர். கல்நெஞ்சம் படைத்த தாய் திலகவதி பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரை 21.06.21ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே போல கடந்த 04.11.22ம் ஆண்டு ஆரணி அருகே காங்கிரந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயசுதாவிற்கு திருமணமாகி ஏனோக்ராஜ்(2) என்ற மகனுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த போது ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாணிக்கம் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டு சேவூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
நீதிமன்றம் தாய் உட்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
இந்நிலையில் கள்ளகாதல் கசப்பு ஏற்பட்டு விரிசலடைந்த காரணத்தினால் கூலி தொழிலாளி மாணிக்கம் ஜெயசுதா மற்றும் குழந்தையை கொடுமைபடுத்தியுள்ளார். இதில் குழந்தை ஏனோக்ராஜ(2) படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இரு சம்பவம் வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் இன்று ஆரணி நீதிமன்ற நீதிபதி பேய் பிடித்ததாக கூறி மகனை கழுத்து நெறித்து கொலை செய்த வழக்கில் திலகவதி கவிதா பாக்கியலட்சுமி ஆகிய 3 பெண்களுக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் குழந்தையை கொடுமைபடுத்தி கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளி மாணிக்கத்திற்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனை குழந்தை துன்புறுத்தல் 10 ஆண்டு உள்ளிட்ட 24 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்ற நீதிபதி ஒரே நாளில் 2 வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.