மேலும் அறிய

Crime: வந்தவாசி அருகே இளைஞர் கட்டையால் அடித்து கொலை

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கட்டையால் அடித்து கொலை செய்தவரை ‌காவல்துறையினர் கைது செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள விழுதுபட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் வயது (19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று சக்திவேல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அந்த சிறுவனும் வந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான்.

Crime: வந்தவாசி அருகே  இளைஞர் கட்டையால் அடித்து கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுக்கானூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமான இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). டெய்லரான இவர், திருவண்ணாமலையில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நாள்தோறும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி, இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு ஆறுமுகம் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

Crime: வந்தவாசி அருகே  இளைஞர் கட்டையால் அடித்து கொலை

தாமரை நகரில் உள்ள ஹவுசிங் போர்டு அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள், ஆறுமுகத்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார், கொலையான ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget