Crime: இரும்பு பழுப்பால் தாக்கி தம்பி கொடூர கொலை - உடலை செப்டி டேங்கில் புதைத்த அண்ணன் கைது
கலசப்பாக்கம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் சொந்த தம்பியை இரும்பு பழுப்பால் தாக்கி கொலை உடலை செப்டி டேங்கில் புதைத்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்தில் கீழ்குப்பம் கிராமத்தில் வசிக்கும் சென்ன கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு பேர் உள்ளனர். இதில் மூத்த மகன் ஏழுமலை இவர் குடிப்பழத்துக்கு அடிமையானவர், அவரை விட்டு அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஏழுமலையான் தம்பி திருமலைக்கும் திருமணம் ஆகவில்லை, எனவே அண்ணன் தம்பி இருவரும் சொந்த வீட்டிலேயே தங்கி கொண்டு தனியாக சமைத்து சாப்பிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். தினமும் மாலை நேரத்தில் இருவரும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்கள் போதை தலைக்கு ஏறியதும் இரவு முழுவதும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது வழக்கம். ஆனால் நேற்று அவர்களிடம் இருந்து தகராறு சத்தமோ எதுவும் வரவில்லை மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும் திருமலையை காணவில்லை என பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் எதிர் வீட்டில் உள்ளவர்கள் கீழ்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கடலாடி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ரகசிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பியிடையே போதையில் ஏற்பட்ட தகராறு இதில் ஒருவரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கடலாடி காவல்துறையினர் கீழ்குப்பம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சென்ன கிருஷ்ணன் மகன் ஏழுமலை வயது (46) என்பவரிடம் விசாரணை நடத்தினர். ’உனக்கும் உனது தம்பிக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் உனது தம்பி காணவில்லை என புகார் வந்துள்ளது. உனது தம்பி எங்கே சென்று உள்ளார்’ என காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். இதைக் கேட்ட ஏழுமலை நேற்று முன்தினம் இரவு எனக்கும் எனது தம்பிக்கும் போதை அதிகமானதால் தகராறு ஏற்பட்டது. இதில் இரும்பு பைபால் நான் தாக்கியதால் தம்பி சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டான்.
இது வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது, என எனது தம்பிக்கு திருமணம் ஆகாததால் புகார் அளிக்க யாரும் வரமாட்டார்கள் என்பதால் வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் பள்ளத்தில் புதைத்து விட்டேன் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள ஆட்களை காவல்துறையினர் வரவழைத்து ஏழுமலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் தோன்றியுள்ளனர். அப்பொழுது செப்டிக் டேங்கில் ஏழுமலையின் தம்பி திருமலையின் உடலை காவல்துறையினர் மீட்டனர். திருமலையின் உடலை பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கடலாடி ஆய்வாளர் லட்சுமிபதி வழக்கு பதிவு செய்து ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்தனர். போதையில் அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கொலையில் முடிந்த சம்பவம் கீழ்குப்பம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.