Crime news : வீட்டுக்குள் பாதி ரெடியான கல்லறை.. தாயைக் கொன்றுவிட்டு ரெஸ்ட் எடுத்த மகன்! திருவள்ளூர் திகில்!
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைக்கு போக சொன்ன தாயை மகன் கொலை செய்து வீட்டுக்குள் புதைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கூடபாக்கத்தை சேர்ந்தவர் மல்லிகா.தனது கணவர் ஆனந்த் உடன் அதே பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். மகள் மற்றும் மூத்த மகன் ராம்தாஸுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தநிலையில், இளையமகன் ஜெயபால் வேலைக்கு செல்லாமல் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை வேலை காரணமாக மல்லிகாவின் கணவர் ஆனந்த் வெளியூர் சென்றிருந்தநிலையில், மல்லிகா மற்றும் இளையமகன் ஜெயபால் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். வேலைக்கு போகாமல் நாள்தோறும் ஊதாரியாக ஊரை சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த ஜெயபாலிடம், தாய் மல்லிகா இப்படி தினம் வேலைக்கு போகாமல் ஊரை சுற்றுவதால் உனக்கு என்ன கிடைத்து விட்டது. ஒழுங்காக வேலைக்கு சென்றால்தானே உனக்கு என்று ஒரு குடும்பம் அமையும், வீட்டையும் பார்த்துக்கொள்ள முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனால் கோவமடைந்த ஜெயபால், ஒரு கட்டத்தில் தாயின் அறிவுரையை தாங்கமுடியாமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளார். கோவத்தில் இவ்வளவு பெரிய சம்பவம் ஒரு நொடியில் நடந்துவிட்டதே என்று எண்ணிய அவர், கொலையை மறைக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
அதன்படி, தாய் மல்லிகாவின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே புதைக்க குழி தோண்ட முயற்சி செய்துள்ளார். எப்பொழுது வேலை செய்து பழக்கம் இல்லாத ஜெயபாலுக்கு ஒரு கட்டத்தில் உடல் மிகவும் சோர்வடைய, பாதி தோண்டிய குழி அருகே படுத்து உறங்கியுள்ளார்.
அதிகாலை கண்விழித்த ஜெயபால் மீண்டும் குழி தோண்டஆரம்பித்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக மூத்தமகன் ராம்தாஸ் அங்கு வந்து அந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, அருகில் உள்ள வெள்ளவேடு காவல்நிலையத்தில் தனது தம்பி குறித்து தகவக் தெரிவித்துள்ளார். விரைந்துவந்த காவல்துறையினர் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாகவும், தப்பி ஓட முயற்சி செய்த ஜெயபாலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
12th Revision Exam: மறுபடியும் லீக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்! இன்று வணிக கணிதம்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்