CSK on Raina: ''ரெய்னாவை இந்த காரணத்தால்தான் செலக்ட் செய்யல.'' விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக இவர் திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் இவர் 160 ரன்கள் மட்டுமே அடித்தார்.
2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் பெங்களூருவில் நடந்து முடிந்தது. எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதை போல, இந்த மெகா ஏலத்தில் சில முக்கிய வீரர்களை எந்த அணியும் வாங்கவில்லை. இதில், மிஸ்டர் ஐபிஎல் என கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே அது ஒரு ‘விக்ரமன் குடும்பம்’ போன்றது என்பது அனைவரும் அறிந்ததே. அணியை வழிநடத்திச் செல்வதில் சில சில பிரச்னைகள் இருந்தாலும், அதையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடுவது சிஎஸ்கே அணியின் சிறப்பு. அந்த வரிசையில், ஐபில் வரலாற்றில் குஜராத் அணிக்காக விளையாடியதை தவிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடிய சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது குறித்து அந்த அணி சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
Super Thanks for all the Yellove memories, Chinna Thala!🥺
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) February 13, 2022
#SuperkingForever 🦁 pic.twitter.com/RgyjXHyl9l
அதில், “கடந்த 12 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. அவரை அணியில் எடுக்க முடியாத சூழலை கடப்பது கடினமாக இருந்தது. அதே நேரம், ஓர் அணியை கட்டமைக்க வேண்டும் என்றபோது ஃபார்ம் மிக முக்கியம். மேலும், இனி சிஎஸ்கேவில் அவர் ‘ஃபிட்டாக’ மாட்டார் என்ற காரணத்திற்காக அவரை தேர்ந்தெடுக்கவில்லை” என தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை 2018-ம் ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைத்தது. அந்த 2018-ம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் திரும்ப வந்த போது 15 போட்டிகளில் விளையாடி 445 ரன்கள் அடித்தார். எனினும் 2019-ம் ஆண்டு முதல் இவர் சொதப்ப தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்தார். பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் இவர் சற்று மோசமாக செயல்பட தொடங்கினார். 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக இவர் திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் இவர் 160 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், இளம் வீரர்களை மாற்று வீரர்களாக கண்டுகொண்ட சிஎஸ்கே அணி, ரெய்னாவை தேர்வு செய்யவில்லை என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்