பீரோ விழுந்து காதலி மரணம்; காதலன் புகார்! பல்லடம் அருகே ஆணவக்கொலையா?
பல்லடம் அருகே 22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே 22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் வெண்மணி. அதேப் பகுதியைச் சேர்ந்தவர் வித்யா. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு வெண்மணி குடும்பத்துடன் வந்து பெண்ணின் பெற்றோரிடம் திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து பெற்றோர் வீட்டில் இருந்த பீரோ விழுந்து வித்யா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேலும் வித்யாவின் உடலை பெற்றோரும் உறவினரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காதலன் வெண்மணி ஆணவக்கொலையா என சந்தேகம் இருப்பதாக காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காதலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வித்யா வீட்டில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை தேடி வருகின்றனர். மேலும் பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

