1 லிட்டர் பெட்ரோலுக்கு TVS Apache RTR 160 எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?

TVS Apache RTR 160 4V Special Edition பைக்கின் மைலேஜ், விலை, நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து பார்க்கலாம்.

Published by: ராஜேஷ். எஸ்

நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்:

தொழில்நுட்ப ரீதியாக இந்த பைக் பல புதிய அப்டேட்டுகளைப் பெற்றுள்ளது.

TFT டிஸ்ப்ளே

இதில் புளூடூத் வசதியுடன் கூடிய SmartXonnect TFT ஸ்கிரீன் உள்ளது. இது நேவிகேஷன் மற்றும் கால் அலர்ட் வசதிகளை வழங்குகிறது.

மைலேஜ்

1 லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 45 கி.மீ தூரம் வரை ஓட்டலாம், 5 லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 225 கி.மீ தூரம் வரை ஓட்டலாம்.

ரைடிங் மோடுகள்

நகர்ப்புற மற்றும் மழைக்கால ரைடிங்கிற்கு ஏற்ப அர்பன் (Urban), ரெயின் (Rain) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகிய மூன்று மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

சிறந்த பிரேக்கிங் கட்டுப்பாட்டிற்கு டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

USB சார்ஜர்

பயணத்தின் போது மொபைல் சார்ஜ் செய்ய கூடுதலாக ஒரு யூஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கலர் மற்றும் பிரீமியம் டிசைன்

இந்த ஸ்பெஷல் எடிஷனின் மிக முக்கிய அம்சமே இதன் வண்ண வடிவமைப்புதான்.

மேட் சேம்பைன் கோல்டு (Matte Champagne Gold)

பைக் முழுவதும் புதிய பிளாக் மற்றும் கோல்டு கலந்த பிரீமியம் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோல்டு அலாய் வீல்கள்

பைக்கிற்கு ஸ்போர்ட்டி லுக்கை தரும் வகையில் அலாய் வீல்களும் டூயல்-டோன் கோல்டு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன.

இன்ஜின் திறன் மற்றும் விலை

இதன் இன்ஜின் செயல்திறனில் மாற்றங்கள் இல்லை. வழக்கமான 159.7cc, ஆயில்-கூல்டு இன்ஜின் 17.55 PS பவரை வெளிப்படுத்துகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 1.38 லட்சம் முதல் ரூ. 1.51 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.