(Source: ECI | ABP NEWS)
ஒரே வீட்டுக்கு 3 முறை டார்கெட்! காணாமல் போன விலையுயர்ந்த சிலை.. திருடர்கள் கைவரிசை
சொந்த ஊருக்கு திரும்பிய சாந்தி தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பாக கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த மூன்று பீரோக்களும் உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே ஒரே வீட்டை குறி வைத்து மூன்றாவது முறை நடைப்பெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊருக்கு சென்ற தம்பதி:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சவுலூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மனைவி சாந்தி (51) திருப்பதி உயிர் இழந்த நிலையில் தன்னுடைய மகன்களான குமரேசன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
கைவரிசைக் காட்டிய திருடர்கள்:
இந்த நிலையில் சாந்தி தன்னுடைய மகன்கள் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.அதனைத் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்க பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சாந்தி தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பாக கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த மூன்று பீரோக்களும் உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் பூஜை அறையில் இருந்த 200 கிராம் வெள்ளி விநாயகர் சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மூன்றாவது முறையாக திருட்டு:
மேலும் இதே வீட்டில் முதல் முறை மர்மநபர்கள் மூன்றரை சவரன் தங்க நகை திருடியுள்ளனர். அதேபோல் இரண்டாவது முறை 22 பட்டுப் புடவைகளை திருடியுள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக ஒரே வீட்டை குறிவைத்து பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விநாயகரை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினர் வீடு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து திருடி செல்கின்றனரா? அல்லது மர்ம நபர்களா? எனவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது






















