Crime: ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் - இரவோடு இரவாக தூக்கிய தூத்துக்குடி போலீஸ்
தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முனீஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி மேலூர் ரயில்வே நிலையம் அருகில் கோமஸ்புரம் ராஜுவ் நகரை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன். சுமை தூக்கும் தொழிலாளி. அங்குள்ள ஒரு குடோனில் வேலையைவிட்டு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி கல்லால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த முனீஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதன்பேரில் தூத்துக்குடி உட்கோட்ட நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கெல்கர் சுப்ரமணிய பால்சந்திரா உத்தரவின்பேரில், தெர்மல் நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் முதல் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமணி ராஜன், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.