மேலும் அறிய
Crime: திருமணம் என்று ஆசைவார்த்தை.. நம்பிக்கையுடன் காதலித்த பெண்.. கழட்டிவிட்ட காதலனால் தற்கொலைக்கு முயற்சி!
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த ராஜேஷ் ஒரு கட்டத்தில் சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
![Crime: திருமணம் என்று ஆசைவார்த்தை.. நம்பிக்கையுடன் காதலித்த பெண்.. கழட்டிவிட்ட காதலனால் தற்கொலைக்கு முயற்சி! Thiruvarur: A police complaint has been lodged against the young man who cheated him to marry Crime: திருமணம் என்று ஆசைவார்த்தை.. நம்பிக்கையுடன் காதலித்த பெண்.. கழட்டிவிட்ட காதலனால் தற்கொலைக்கு முயற்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/19/da843e66d815e03b5c670dc9400578b81679205986273571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராஜேஷ் - சங்கீதா
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த ராஜேஷ் ஒரு கட்டத்தில் சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் வயது 25. இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அப்போது இவருக்கு திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் திருவனாதபுரம் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகள் சங்கீதா வயது 23 என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த ராஜேஷ் ஒரு கட்டத்தில் சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஊர் பஞ்சாயத்தில் பெண் வீட்டார் முறையிட்டபோது ராஜேஷின் தந்தை தனது மகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சங்கீதா திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவதாகவும் சங்கீதாவும் ராஜேஷும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் மன உளைச்சலில் இருந்து வந்த சங்கீதா தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பெண்ணின் வீட்டார் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் சங்கீதாவிடம் நடத்திய விசாரணையில் என்னை காதலித்து ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவதாகவும் மேலும் தன்னிடமிருந்து ஒரு சவரன் நகை 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் ராஜேஷ் மீது சீட்டிங் வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள ராஜேஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion