மேலும் அறிய

திருவண்ணாமலை: கடன் பிரச்னையால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை - அனாதையான 3 குழந்தைகள்

ஆரணி அருகே குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த விவசாயி, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் ஆதரவு இன்றி அனாதையாக உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட வாரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (47), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (41). இவர்களுக்கு திருமணமாகி யோகேஸ்வரி (16), ஹேமமாலினி (9) ஆகிய 2 மகள்களும், கவுரிசங்கர் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் அங்கு உள்ள அரசினர் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூர்த்தியின் மாமனாரான ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கலைச்செல்வி, தனது கணவரிடம் கூறி, தன்னுடைய வீட்டு பத்திரத்தை தந்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர் பத்திரத்தை அடமானம் வைத்து கடனாக பணத்தை பெற்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகியும் கலைச்செல்வியின் தந்தை ஏழுமலை அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டு கொடுக்கவில்லை.

திருவண்ணாமலை: கடன் பிரச்னையால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை - அனாதையான 3 குழந்தைகள்

இதனால் கணவன், மனைவி இருவருக்கும்  இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது குழந்தைகளின் முன்னிலையிலேயே, மனைவி கலைச்செல்வியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார் இதனால் தலையில் இரத்தம் தெரித்துள்ளது சம்பவ இடத்திலேயே மயக்கம் கீழே விழுந்துள்ளார். சென்று அருகில் பார்த்த மூர்த்தி மூச்சு இல்லாமல் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு கலைச்செல்வியை நாம் தான் கொலை செய்துள்ளோம் என எண்ணி மனவேதனை அடைந்துள்ளார். கலைச்செல்வி இறந்ததும், மூர்த்தி வீட்டின் அருகில் தனது நிலத்திற்கு வேகமாக  சென்று  அங்குள்ள  மரத்தில் மன வேதனையுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருவண்ணாமலை: கடன் பிரச்னையால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை - அனாதையான 3 குழந்தைகள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், தாலுகா காவல் நிலைய  ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மனைவியை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044-2464000 State suicide prevention helpline – 104 ,iCall Pychosocial helpline – 022-25521111 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget