Crime: ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய மெக்கானிக்..! என்ன காரணம்..?
திருவண்ணாமலையில் தொடர்ந்து இருச்சக்கர வாகனங்களை திருட்டில் ஈடுப்பட்ட இருச்சக்கர வாகன மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 27 வாகனம் பறிமுதல் செய்தனர்.
![Crime: ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய மெக்கானிக்..! என்ன காரணம்..? thiruvannamalai bike mechanic theft splendur plus bikes in hospital Crime: ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய மெக்கானிக்..! என்ன காரணம்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/7bb8268c24f3d3f4c3d0caf20381ccb91671287539142187_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்பதற்கு வருபவர்களின் வாகனங்கள் பார்க்கிங்கில் விட்டு செல்வார்கள்,அப்போது நோயாளியை பார்த்து விட்டு வெளியே வந்து பார்த்தால் இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டப்பட்டதாக தொடர்ந்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் காவல்துறையினர் பதிவு செய்யப்பட்டு வந்தனர். தொடர் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்திரவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மேற்பார்வையில் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும், செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேளானந்தல் புதூர் பாடசாலை தெருவை சேர்ந்த விஜி வயது (36) என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
உடனடியாக கீழ்பென்னாத்தூர் பகுதிக்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விஜியை கைது செய்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விஜியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் இதற்கு முன்பு இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் வேலை செய்து வந்ததாகவும், அதில் போதுமான பணம் இல்லாததால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் தனியாக நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருட்டு போன 27 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட இருச்சக்கர வாகனங்கள் அனைத்தும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ( Hero Splendor Plus) இதனை மட்டும் குறிவைத்து இவர் திருடுவதற்கு காரணம் என்ன என்று காவல்துறையினர் வட்டாரத்தில் கூறியதாவது, இந்த இருச்சக்கர வாகனங்கள் மட்டும் பழைய சாவி மட்டும் ஒன்று இருந்தால் போதும் அந்த சாவியை பயண்படுத்தி அந்தவகை இருச்சக்கர வாகனங்கள் திருடமுடியும் என்றும் அதனுடைய லாக் சுலபமாக உடைக்க முடியும் என்றும், இந்த வகையான இருச்சக்கர வாகனங்களை தான் கிராம பகுதியில் அதிகமாக வாங்குவதால் இதை மட்டும் திருடுவதாக குற்றவாளி கூறியதாக காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)