மேலும் அறிய

40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு

திருவள்ளூரில் பணி முடித்து வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரால் அதிர்ச்சி

திருவள்ளூர்: பொன்னேரி அருகே பணி முடித்து வீட்டுக்கு நடந்து சென்ற 40 வயது பெண்ணை இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி, பாதி வழியில் கத்தியை காட்டி பாலியல் அத்துமீறல் ஈடுபட்டார். உடலில் காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பணி முடிந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நேற்று இரவு பணி முடித்து விட்டு 9 மணி அளவில் ஆமூர் ஏரிக்கரை சாலையில் நடந்து சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் அழைத்து  சென்று விடுவதாக இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். அந்த வழிய செல்லும் இளைஞர் தானே என்று அப்பெண் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு சென்றபோது, ஏரிக்கரை கோவில் அருகே திடீரென இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கத்தியை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இருள் சூழ்ந்த பகுதி என்பதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவை தாண்டி தான் பெண்ணின் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே, அவரை அந்த இளைஞர் காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்து கையில் கிடைத்த கட்டையால் முதுகில் அடித்து கத்தியைக் காட்டி துன்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது

அப்பெண் கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அங்கும் இங்கும் ஓடிய நிலையில் அப்போது அவ்வழியே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தை கண்ட அந்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடு உள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற அப்பகுதியைச் சேர்ந்த  ஒருவர் அப்பெண்ணை மீட்டு காவல் துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கச் சொல்லி வழக்கு பதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சைனவரம் பகுதியில் இருந்து அமுருக்கு  செல்வதற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏரிக்கரை ஒட்டி சாலை செல்வதால் அப்பகுதி  இருள் சூழ்ந்து  காணப்படுவதாலும் இதுபோன்று அசம்பாவிதங்கள் அப்பகுதியில் செல்லும் பெண்களுக்கு அடிக்கடி நடைபெறுவதாகவும் இதுபோன்று இனி எந்த பெண்ணுக்கும் நடைபெறக் கூடாது என பாதிக்கப்பட்ட  பெண் புகார் அளித்துள்ளார்.

மேலும், சைனாவரம், மாதவரம், தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் அந்த கிராமத்திற்கு செல்ல மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் நிலை இருப்பதால் இதை பயன்படுத்தி ஒரு சில நபர்கள் இதுபோன்று பாலியல் அத்துமீறல்கள் ஈடுபடுவதாகவும் இப்பகுதியில் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget