மேலும் அறிய

crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

அப்பொழுது கேரள பதிவு கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது, அவர்களிடம் முதலில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்ட போது,  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது  வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது  தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து  ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்  உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மொத்த விற்பனையாளர் யார்? மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளி யார்?  தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனிப்படையினர் மேலும் கோவை, ஈரோடு, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  மேகு மேலும் 3 இளைஞர்களை கைது செய்து காரையும் பறிமுதல் செய்து நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் கொடைக்கானல் வரும்  வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மெத்தப்பட்டம்மைன், கொக்கையின், என் எஸ் டி ஸ்டாம்ப், உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .

மேலும் விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், யாசர் முக்தார், அன்பழகன் ஆகிய ஐந்து நபர்களும் போதைப் பொருட்களை  கேரளா மற்றும் பெங்களூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து ராம்குமாரிடம் கொடுப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தனிப்படையினர்  தேடி வருகின்றனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மேலும் இதுவரையில் சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில்  மொத்தம் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் அடிப்படையில்  பெரியகுளம் வடகரை காவல்துறை ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தலுக்கு உதவியாளர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Embed widget