மேலும் அறிய
Advertisement
நண்பனை குத்திக்கொன்று கடலில் வீசிய வாலிபர் - கூடா நட்பு கேடாய் முடிந்தது எப்படி?
’’நண்பர்கள் அனைவரும் மகேஸ்வரன் சொல்வதைதான் கேட்டு வந்துள்ளனர். இதனால் அந்த நட்பு வட்டத்தில் இருந்த கார்த்திக் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார்’’
சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் வசித்து வந்தவர் மகேஸ்வரன். இவர் கடந்த 5 ஆம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக அவரது தாய் பஞ்சவர்ணம் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். காணாமல் போன மகேஸ்வரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் துலுக்கானத்தம் மன் கோவில் எதிரில் வாலிபரின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றி பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அபிராமபுரம் போலீசார் காணாமல் போன மகேஸ்வரனின் தாய் பஞ்சவர்ணத்தை அழைத்து சென்று கரை ஒதுங்கிய வாலிபரின் உடலை காட்டினார்கள். அப்போது அவர், இது தனது மகனின் உடல்தான் என்று கூறி கதறினார். இதையடுத்து அபிராமபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மகேஸ்வரன் கடந்த 5 ஆம் தேதி அன்னை சத்யா நகரை சேர்ந்த தனது நண்பர் கார்த்திக்குடன் வெளியில் சென்ற போதுதான் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரனை கார்த்திக் கொலை செய்து கடலில் வீசியது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் கார்த்திக் சரணடைய இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு மறைந்து இருந்து கண்காணித்தனர். இதனை அறிந்ததும் கார்த்திக் சரண் அடையாமல் தப்பியோடி தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கார்த்திக் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் யார், யாருடன் பேசி உள்ளார் என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டினார்கள். கார்த்திக்கின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். இதனிடையே நேற்று சைதாப்பேட்டை 23 ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் கார்த்திக் சரணடைந்தார். என் நண்பன் மகேஸ்வரனை, நான் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் .
இதனையடுத்து கார்த்திக் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், கார்த்திக் மற்றும் மகேஸ்வரன் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதில் கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் தனக்கென்று ஒரு நட்பு வட்டாரத்தை வைத்துள்ளார், அவரின் நண்பர்கள் அனைவரும் மகேஸ்வரன் சொல்வதைதான் கேட்டு வந்துள்ளனர். இதனால் அந்த நட்பு வட்டத்தில் இருந்த கார்த்திக் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 தேதி பட்டினபாக்கம் முகத்துவாரத்தில் இருவரும் ஒன்றாக மது அருந்திய போது இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கார்த்திக் மதுபோதையில், இனி நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என கூறி உள்ளார். ஒரு கட்டத்தில் மகேஸ்வரன் கார்த்திக்கை அடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். ஆனால் கார்த்திக் திடீரென கத்தியை எடுத்து மகேஸ்வரன் தலை உட்பட உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் உயிரிழந்தார். உடனே கார்த்திக் தனது நண்பர்கள் உதவியுடன் கடலில் இறங்கி சற்று தொலைவில், உடலை வீசி விட்டு தப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion