Crime | செல்போன் மோகத்தில் சிக்கிய மாணவன்.. அறிவுரை கூறிய ஆசிரியருக்கு கத்திக்குத்து.. பெரும் பரபரப்பு.. (வீடியோ)
வகுப்பறையில் செல்போனில் விளையாடிய மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் பதிலுக்கு கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் பயன்பாடு அனைவரிடம் அதிமடைந்துள்ளது. செல்போன் மூலம் இணையத்தை பயன்படுத்தி பலரும் பயனடைகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை எளிமையாக பயன்படுத்துகின்றனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் முதல் முதுகலைப் பட்டப்படிப்புவரை ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்றது. இப்படியான சூழல் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் செல்போன் மூலம் தவறான பாதைக்குச் செல்லும் வழிகளும் இருக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் வகுப்பறையில் செல்போனில் விளையாடிய மாணவனை ஆசிரியர் கண்டித்ததால், பதிலுக்கு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவன் கைது செய்யப்பட்டார்.
#Abpnadu செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.. #sivagangai | #karaikudi | #cellphone | #college | @reportervignesh | @vetridhaasan | #TamilNadu #police | @pkr_madras | @Venkate76966592 . . . .. .. . . . . . pic.twitter.com/G43choIYht
— Arunchinna (@iamarunchinna) February 17, 2022