"கன்னியாகுமரியில் எஸ்.ஐயை வெட்டிய ரவுடி” அதிரடியாக சுட்டு பிடித்த இன்ஸ்பெக்டர்..!
செல்வம் மீது குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 க்கு மேற்பட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
கொலை வழக்கு உட்பட 27 க்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி செல்வம் மீது கன்னியாகுமரி போலீசார் துப்பாக்கிச்சூடு. கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் மறைந்திருந்த ரவுடியை பிடிக்க சென்ற எஸ்.ஐ., க்கு அரிவாள் வெட்டு.
தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாவட்டம் தோறும் ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக் குளம் அருகே கரும்பாட்ரூரைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இவர் மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன. செல்வம் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த குற்றச் சம்பவங்களில் அதிகமாக இவர் ஈடுபட்டதால் தூத்துக்குடி செல்வம் என்று போலீஸ் வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். செல்வத்தை போலீசார் தேடி வந்த நிலையில் கன்னியாகுமரி பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் போலீசார் அஞ்சு கிராமம் பகுதியில் நின்ற செல்வத்தை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை சுசீந்திரம் அருகே தேரூரில் செல்வம் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு போலீசார் விரைந்து சென்று அவரை சுற்றி உள்ளனர். தப்பி ஓடும் எண்ணத்தில் செல்வம் கத்தியால் தாக்கியதில் உதவிய ஆய்வாளர் லிபி பால் ராஜின் இடது கையில் கீறல் விழுந்தது. இதனையடுத்து செல்வத்தை நோக்கி ஆய்வாளர் ஆதம் அலி துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் காயம் ஏற்பட்டதால் தப்ப முடியாமல் நின்ற ரவுடி செல்வத்தை போலீசார் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த உதவியாளர் லிபி பால் ராஜ் மற்றும் ரவுடி செல்வம் ஆகிய இருவரையும் ஆசாரிப்பள்ளம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று மாவட்டங்களில் கொலை மற்றும் குற்ற சம்பவம் இருக்கட்டும் பிரபல ரவுடி செல்வம் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.