மேலும் அறிய

பலமுறை பாலியல் வன்கொடுமை.. சிறுமி உயிரிழப்பு - குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ.?

புதுச்சேரி: பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டவருக்கு அமைச்சர் பதவியா? - சிறுமியின் தாய் ஆவேசம்!

புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகர் பகுதியில் வசித்து வரும் பரமேஸ்வரி என்பவரது 17 வயது மகள் கல்லூரி படித்து வந்தார். இவரது தந்தை இறந்துவிட்டார். சிறுமி தனது தாயுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தாய் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் சிறுமியின் வீட்டில் புகுந்து சிறுமியை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி தொடர்ந்து பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ளார்.

பலமுறை பாலியல் வன்கொடுமை.. சிறுமி உயிரிழப்பு - குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ.?

இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமி கேரளாவில் உள்ள தனது சித்தி வீட்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததன் மூலம் சிறுமி பல முறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உடனடியாக சிறுமியின் சித்தி, திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கேரள போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த புதுச்சேரியை சேர்ந்த அருண்குமார் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளி

இது குறித்து சிறுமியின் தாய் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக தற்போது பா.ஜ.க அமைச்சரவை பட்டியலில் இடம்பிடித்துள்ள எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் செயல்பட்டு வழக்குப் பதிவு செய்யாமல் தடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்,

பலமுறை பாலியல் வன்கொடுமை.. சிறுமி உயிரிழப்பு - குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ.?

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய் பரமேஸ்வரி, எனது மகளை வலுக்கட்டாயமாக சீரழித்து அவரது உயிரிழப்புக்கு காரணமாக அருண்குமாரை கேரளா நீதிமன்றத்திலேயே கடுமையான தண்டனையை கொடுத்து தண்டிக்க வேண்டும். மேலும், குற்றவாளி அருண் குமாருக்கு ஆதரவாக அவரது மாமாவும், தற்போது பா.ஜ.க சார்பில் அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவருமான சாய் சரவணகுமாரும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டள்ளதாகவும், மேலும் ரவுடிகளை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட சாய் சரவணகுமாருக்கு புதுச்சேரியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget