தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் காணாமல் போன இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்த மாரி செல்வம் என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் மூன்று பேரை கைது செய்து தாளமுத்து நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளைஞர் கடத்திக் கொலை:
மாரி செல்வத்தை லூர்தம்மாள் புரம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கோட்டை சுவர் பகுதியில் கொலை செய்து புதைத்ததாக தகவல் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மாரி செல்வம் உடலை நாளை தோண்டி எடுப்பு சம்பவப் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரி செல்வம் இளைஞர் ஆன இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் கடந்த 21 ஆம் தேதி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அன்று மாலை வீட்டிலிருந்து வெளியேறிய மாரி செல்வம் வீடு திரும்பவில்லை.இதை ஆடுத்து மாரி செல்வத்தின் சகோதரி மாரீஸ்வரி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் மாரி செல்வத்தை காணவில்லை அவருடன் தகராறு செய்த நபர்கள் அவரை கடத்தி வெட்டி கொலை செய்துள்ளனர். எனவே காவல்துறை தனது சகோதரரை மீட்டு தர வேண்டும் என தனது தாயுடன் கடந்த ஒன்றாம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில் தாளமுத்து நகர் காவல்துறையினர் காணாமல் போன செல்வத்துடன் தகராறில் ஈடுபட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தகராறு காரணமாக மாரி செல்வத்தை கடத்திச் சென்று தூத்துக்குடி லூர்த்தம்மாள் புரத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத முட்புதர் அடங்கிய கோட்டை சுவர் பகுதியில் கொன்று புதைத்ததாக தகவல் அளித்தனர்.
தோண்டி எடுக்கப்பட்ட உடல்:
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளமுத்து நகர் காவல் துறையினர் மாரி செல்வம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பகுதியை அடையாளம் கண்டனர் அந்த பகுதிக்கு காவல்துறையினர் வந்ததை தொடர்ந்து பொதுமக்களின் கூட்டம் அந்தப் பகுதியை சூழ்ந்தது இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதை அடுத்து காவல்துறையினர் இன்று உடலை தோண்டி எடுக்க உள்ள நிலையில் அந்தப் பகுதியில் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தூத்துக்குடியில் காணாமல் போன இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.