மேலும் அறிய

காத்திருந்த காதலி... புறப்பட்ட காதலன் சடலமாக மீட்பு!

காதலியைத் தேடிச்சென்ற இளைஞர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ நெடுஞ்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜ் (22), இவர் தொலைதூர கல்வி மூலம் கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தேவாராதனை தேடி அலைந்தனர். அப்போது அவர் தனது காதலியை பார்ப்பதற்காக அருகிலுள்ள சாவடி குப்பம் கிராமத்திற்கு சென்று இருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தேவராஜன் உறவினர்கள் சாவடிகுப்பம் கிராமத்திற்கு சென்றனர். சாவடிகுப்பம் விநாயகபுரம் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகில் தேவராஜன் மோட்டார் சைக்கிள் பூட்டிய நிலையில் கேட்பாரற்று கிடந்தது அங்கு உள்ள கிணற்றின் அருகில் உள்ள மரத்தடியில் அவரது வேட்டி, செல்போன், மூக்கு கண்ணாடி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் சாவி கடந்தது, ஆனால் தேவராஜன் காணவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜனின் அண்ணன் தீயரசன் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரில் காதலியை பார்க்க சென்ற தனது தம்பி மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார்.

காத்திருந்த காதலி... புறப்பட்ட காதலன் சடலமாக மீட்பு!

இந்நிலையில் தேவராஜனை  கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் வீசியிருக்கலாம் என்று வதந்தி பரவியது, இதனையடுத்து ஸ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாவடிகுப்பம் கிராமத்தில் தேவராஜனின் உடமைகளை கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் அருகே திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரை இரண்டு மோட்டார் மூலம் வெளியேற்றினார்கள் கிணற்றில் அவரை காணவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக தேவராஜனின் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவராஜன் தன்னை சந்திக்க வருவதாக செல்போனில் கூறினார் அதன்படி நான் அவருக்காக ஓரிடத்தில் காத்து இருந்தேன் ஆனால் வெகு நேரமாகியும் அவர் வராததால் நான் வீட்டுக்கு சென்று விட்டேன் என்று தேவராஜனின் காதலி கூறியதாகச் சொல்லப்படுகிறது.

காத்திருந்த காதலி... புறப்பட்ட காதலன் சடலமாக மீட்பு!

இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் தேவராஜனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று தேவராஜ் உடமைகள் இருந்த அதே பகுதியில் சூசைராஜ் என்பவரது நிலத்திற்கு அருகே சாலையோரம் உள்ள மற்றொரு கிணற்றில் இளைஞரின் உடல் மிதந்து கிடந்த்துள்ளது. தெரு நாய்கள் கிணற்றை சுற்றி வர , சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த முதியவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கிணற்றில் மிதந்த தேவராஜ் உடல் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிரிழந்த தேவராஜன் உறவினர்கள், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் காதலி மற்றும் உறவினர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சடலத்தை எடுத்து செல்ல மறுத்தனர், டிஎஸ்பி அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றது ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். தொடர்ந்து காதலி மற்றும் அவரது உறவினர்களை ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞரின் உடல் பிரதே பரிசோணைக்காக கொண்டு செல்லபட்ட நிலையில் அதன் அடிப்படையிலும், காதலி மற்றும் அவரின் தாய் உறவினர்கள் என 5 நபர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியும் என காவல்துறையினர் தரப்பில் கூறபடுகிறது. காதலியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget