மேலும் அறிய

தஞ்சையில் நகை வியாபாரியிடம் நகைகள் கொள்ளை - மகாராஷ்டிராவை சேர்ந்த இருவர் கைது

விற்கப்படாத நகைகளை உருக்கி திரும்பப் பெற்றுக் கொள்வதும், விற்கப்பட்ட நகைகளுக்கு பணமாகப் பெறுவதும் வழக்கம்.

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உணவகத்தில் நகை வியாபாரியிடம் 6.2 கிலோ நகைகள் மற்றும் ரூ. 14 லட்சம் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி (55). சென்னையில் உள்ள நகைகள் மொத்த வியாபாரியிடம் பணியாற்றி வரும் இவர் பல ஊர்களுக்கும் சென்று கடைகளில் நகைகள் விற்பனை செய்து வருகிறார். அப்போது இவர் விற்கப்படாத நகைகளை உருக்கி திரும்பப் பெற்றுக் கொள்வதும், விற்கப்பட்ட நகைகளுக்கு பணமாகப் பெறுவதும் வழக்கம் என்று கூறப்படுகிறது.

இது போல, தஞ்சாவூருக்கு நகைகளை விற்பதற்காக கடந்த மே31ம் தேதி வந்தார். பின்னர் வழக்கம்போல் பல கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்து விட்டு அன்று இரவு நகை மற்றும் பணம் வைத்திருந்த பையுடன் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஹோட்டலில், உணவு பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுப்பதற்காக பையை கீழே வைத்தார். பணம் கொடுத்த பிறகு கீழே பார்த்தபோது பை காணாமல் போனது தெரியவந்தது. 

இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், 5 கிலோ புதிய நகைகளும், 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகளும், 14 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது தெரியவந்தது. 

இதற்கிடையில், கொள்ளை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரே மாதிரி வெள்ளை நிற சட்டை அணிந்த 9 நபர்கள், மணியின் பையை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக மணி சென்ற கடைகளுக்கும் இந்த வெள்ளை சட்டை அணிந்த நபர்கள் பின்தொடர்ந்து சென்றது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா உத்தரவின்படி 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்த நிலையில், தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த தானாஜி பாபு சுக்லி (32), கார்மலா பகுதியை சேர்ந்த பாண்டுரங் பாபு துகில் (45), என்ற இருவரையும் பிடித்த போலீசார், தஞ்சாவூருக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

பிடிப்பட்ட இருவர்களிடம் நகை எதுவும் சிக்கவில்லை. இன்னும் மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகர் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வருவது போன்று மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இந்தக் கொள்ளையர்கள் போலீசாரை தங்களுக்கு உள்ளேயே நுழைய விட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Embed widget