மேலும் அறிய

வீட்டிலேயே பிரசவம்? அதிக ரத்தப்போக்கால் பெண் பலி: பிறந்த குழந்தையின் சடலம் வாளியில் கண்டெடுப்பு

சுகப் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததா? அல்லது குழந்தையை வேறு யாரும் கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்த நிலையில், ரத்த போக்கு அதிகமானதால் பெண் பலியானார். ஆனால், பிறந்த குழந்தை மர்மமான முறையில் வாளியில் இறந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (38). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பம் தரித்து இருந்தார்.

ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், ஆறாவது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில், குடும்ப சூழல் நிலை காரணமாக, குழந்தையை வளர்ப்பது எப்படி என வசந்தி கவலையுடன் இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிகளவில் ரத்த போக்கு போவதாக வசந்தி அலறி துடித்துள்ளார். இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வசந்தியை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தி இறந்தார். இது வசந்தியின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வசந்தி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவரசமாக வசந்தியின் உடலை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் எந்த தகவலும் சொல்லாமல், வீட்டிற்கு எடுத்து சென்று விட்டனர். இது டாக்டர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து பட்டுக்கோட்டை டவுன் போலீசார் செந்தில் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் வசந்தியின் உறவினர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார்  வீட்டை சோதனை செய்த போது, ஒரு வாளியில் ரத்தகறை படிந்து இருந்தது.

அதனை போலீசார் திறந்து பார்த்த போது வாயில் துணியால் அமுக்கியும், கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில், ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், ஆறாவது குழந்தையை எப்படி வளர்ப்பது என தெரியாமல் இருந்த வசந்தி, யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்து, குழந்தையை மறைத்து விட முடிவு செய்துள்ளார்.

சுகப் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததா? அல்லது குழந்தையை வேறு யாரும் கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் வசந்தி ரத்தப்போக்கு காரணமாக தான் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வசந்தி மற்றும் குழந்தையின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget