Crime: தலைக்கேறிய போதை... நடுரோட்டில் பெண்ணிடம் சில்மிஷம்... நிர்வாணமாக்கிய கொடூரன்... ஷாக் வீடியோ
ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு அவரின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: தலைக்கேறிய போதை... நடுரோட்டில் பெண்ணிடம் சில்மிஷம்... நிர்வாணமாக்கிய கொடூரன்... ஷாக் வீடியோ Telangana Hyderabad a young woman walking influence of alcohol physical assault by a teenager Crime: தலைக்கேறிய போதை... நடுரோட்டில் பெண்ணிடம் சில்மிஷம்... நிர்வாணமாக்கிய கொடூரன்... ஷாக் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/08/4367e39a86807c7f873f44b9a074c91a1691511006882572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு அவரின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் ரகளை:
தெலங்கானா மாநிலம் ஹதராபாத் பாலாஜி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்த மாரய்யா என்பவர் அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து வந்து தவறாக நடக்க முயன்றதால் அந்த பெண் தாக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், பெண்ணின் உடைகளை கிழித்து அடித்து நடுரோட்டில் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டார். இதனை தடுக்க முயன்ற மற்றொரு பெண்ணையும் மாரய்யா தாக்கினார். பாதிக்கப்பட்ட பெண் எவ்வளவோ கெஞ்சியும் போதையில் இருந்த மாரய்யா அந்த பெண்னின் ஆடைகளைக் கிழித்து சுமார் 15 நிமிடங்களுக்கு நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார்.
உள்ளூர்வாசிகள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் உதவ முன்வரவில்லை. மாரய்யா அங்கிருந்து கிளம்பியதும் சிலர் வந்து அருகில் இருந்த ஃப்ளெக்ஸ் கவர்களை அந்த பெண் மீது போர்த்தினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாரய்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடிக்கை பார்த்த பொதுமக்கள்:
ஹைதராபாத்தில் நடுரோட்டில் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்த சம்பவத்தை யாரும் தடுக்க முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடு இல்லாமல் இந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர், அதனை இணையத்திலும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. யாரும் தடுக்க முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் செயல் எனவும், மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் தவறு நடந்தால் அதனை நேரத்தில் தடுக்க வேண்டுமே அதனை வேடிக்கை பார்ப்பது தவறு என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது.
சமீபத்தில் தான், மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல் நடந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹதராபாத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் படிக்க
Crime: 14 வயது சிறுவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை... 600 ஆண்டுகள் சிறை தண்டனை?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)