Crime: 14 வயது சிறுவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை... 600 ஆண்டுகள் சிறை தண்டனை?
அமெரிக்காவில் 14 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: 14 வயது சிறுவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை... 600 ஆண்டுகள் சிறை தண்டனை? Crime america 14 years old boy physically assault by 69 years old teacher 600 years prison Crime: 14 வயது சிறுவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை... 600 ஆண்டுகள் சிறை தண்டனை?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/08/6098733d4fec9b3ab886154469020a001691489327721572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: அமெரிக்காவில் 14 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் செய்த காரியம்:
மாணவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இம்மாதிரியான சம்பவங்கள் உடல் ரீதியாக மட்டும் இன்றி, உளவியல் ரீதியாகவும் மாணவர்கள் மனதில் வடுவாக மாறிவிடுகின்றன. இச்சூழலில், அமெரிக்காவில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, 14 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் 25 முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் அன்னே என் நெல்சன் கோச். இவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016ஆம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, அவர் வகுப்பறையில் ஒரு 14 வயது சிறுவனிடம் நெருக்கமாக பழகி உள்ளார். பின்னர், அந்த சிறுவனுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதுபோல் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இப்படி இருக்கையில், பள்ளியில் வகுப்பறைக்கு பின்புறம் 14 வயதான மாணவனை அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது நெல்சன் என் கோச்க்கு 67 வயது, அந்த சிறுவனுக்கு 14 வயது என்று தெரிகிறது.
600 ஆண்டுகள் சிறை தண்டனை?
இதேபோன்று, அந்த 14 வயது மாணவரை தனியாக அழைத்துச் சென்று 25 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து, சிறுவன் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நெல்சன் என் கோச்க்கு 600 ஆண்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கின் தண்டனை விவரம் அக்டோபர் 27 ஆம் தேதி சொல்லப்படும் என்றும் அதுவரை நெல்சன் என் கோச் சிறையில் இருக்க வேண்டும் என்றும் ஸ்கைல்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 14 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் 25 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை உலுக்கி எடுத்த பாலியல் துன்புறுத்தல்கள்..!
அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியரான 36 வயதான கிறிஸ்டன் கேன்ட், தனது பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் ஐந்து முறை டீன் ஏஜ் மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஜேம்ஸ் மேடிசன் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை அல்லி கெரட்மண்ட், 33, பல மாதங்களாக மாணவன் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)