மேலும் அறிய

கரூர்: இளம்பெண் சாவில் மர்மம்? - உறவினர்கள் திடீரென போராட்டம்

கரூரில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கொம்பாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி. இவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர்.   இவரின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் இவரின் இரண்டாவது மகள் சுவேதா (26). திருமணம் ஆகவில்லை.

 


கரூர்: இளம்பெண் சாவில் மர்மம்? - உறவினர்கள் திடீரென போராட்டம்

இந்த நிலையில் பில்லாபளையம் பகுதியை சேர்ந்த குழுவாளி (எ) சண்முக பிரியன் என்பவர் ஏற்கனவே திருமணம் செய்து குழந்தைகள் உள்ள நிலையில், சுவேதாவை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக செல்வியிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார். உனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இது சரியில்லை என செல்வி கண்டித்துள்ளார். இனிமேல் மகளை பின் தொடர வேண்டாம் என சொல்லியதாகவும்,  அதற்கு மகளை தரவில்லை எனில் கொலை செய்து விடுவேன் என சண்முகம் பிரியன் சொல்லியதாக கூறப்படுகின்றது. 

 


கரூர்: இளம்பெண் சாவில் மர்மம்? - உறவினர்கள் திடீரென போராட்டம்

 

இந்த நிலையில் நேற்று (13-ம்தேதி) செல்வி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது, அங்கு வந்த குழுவாளி (எ) சண்முக பிரியன் மற்றும் அவரின் தாயார் இருவரும் உனது மகள் எங்கள் உறவினர் ரமேஷ் என்பவரின் வீட்டில் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

அதைக் கேட்டவுடன் செல்வி மற்றும் அவரின் தங்கை கணவர் இளையராஜாவுடன் நேரில் சென்று பார்த்த போது, அங்கு உயிரற்ற சடலமாக மகள் படுத்திருந்த நிலையில் கிடந்துள்ளார்.  அப்போது செல்வி கேட்ட போது உனது மகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். அதனையடுத்து தகவலின் பேரில் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 


கரூர்: இளம்பெண் சாவில் மர்மம்? - உறவினர்கள் திடீரென போராட்டம்

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை திரும்ப பெற மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு மருத்துவமனை வாயில் முன்பு அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதை அறிந்த குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்தேகமாக கூறிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவ சான்றிதழ் வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டிஎஸ்பி கூறியதை அடுத்து அனைவரும் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அரசு மருத்துவமனை பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget