மேலும் அறிய

Crime : தண்ணீர் குடித்த பட்டியலினப் பெண்.. கோமியத்தால் சுத்தம் செய்யப்பட்ட தொட்டி.. தொடரும் தீண்டாமை கொடூரம்..

பட்டியலினப் பெண், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீரை குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது

பட்டியலினப் பெண், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீரை குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேறொரு இடத்தைச் சேர்ந்த பட்டியலினப் பெண், ஹெக்கடோரா கிராமத்திற்கு வந்து, ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சில ஆதிக்க சாதியின கிராம மக்கள் பொது சேமிப்பு தொட்டியில் இருந்து குடிநீரை வெளியேற்றிவிட்டு, மாட்டு சிறுநீரைக் கொண்டு "சுத்திகரித்தனர்" என தகவல் வெளியாகியுள்ளது

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, தாசில்தார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். “கடந்த வெள்ளிக்கிழமை, அந்த  கிராமத்தில் பட்டியலின சமூகத்தில் ஒரு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள ஹெச்.டி.கோட்டிலிருந்து பெண் ஒருவர் வந்தார். பொதுத் தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அவசரமாக பேருந்தில் ஏறினார். கிராம மக்கள் விரைந்து அந்த பெண்ணை மிகத்தவறான வார்த்தைகளால் திட்டி, தொட்டியை சுத்தப்படுத்த முடிவு செய்தனர்” என்று சம்பவ இடத்தை சேர்ந்த ஒருவர் கூறினார். வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம கணக்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். பின்னர் அதிகாரிகள் தாசில்தாரிடம் அறிக்கை அளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தாசில்தார் ஐ.இ.பசவராஜு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் தேக்க தொட்டி பொது சொத்து என்றும், அதில் உள்ள தண்ணீரை அனைவரும் குடிக்கலாம் என்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். தாசில்தார் 20 பட்டியலின இளைஞர்களை கிராமத்தில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களுக்கும் அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க வைத்தனர்.  “சமூக நலத் துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து புகாரைப் பதிவுசெய்ய முயன்று வருகின்றனர். சாமராஜநகர் ஊரக காவல் நிலையத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்” என்று தாசில்தார் பசவராஜு கூறினார்.

மேலும் டொட்டியை சுத்தம் செய்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தினர். விரைவில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் அளித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இச்சம்பவம் குறித்து பதிலளித்த சாமராஜநகர மாவட்டப் பொறுப்பாளர் வி.சோமண்ணா, இதுபோன்ற பாரபட்சத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget