மேலும் அறிய

Aarudhra Gold : இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. துபாய் அரசுடன் ஒப்பந்தம்..உச்சகட்டம் செல்லும் ஆருத்ரா மோசடி வழக்கு..

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் இயக்குனர்களை பிடிக்க துபாய் அரசுடன் பரஸ்பர ஒப்பந்தத்தை தமிழ்நாடு காவல்துறை ஏற்படுத்தியுள்ளது

கோடி கோடியாய் அள்ளிச்சென்ற நிறுவனங்கள்
 
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம்,  1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 8 மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை
 
ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 127 அசையா சொத்துக்களை சென்னை பொருளாதார, குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மதிப்பு 23.34 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மதிப்பீட்டின்படி 23.34 கோடி என்றாலும், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் இயக்குனரான ராஜசேகரின் 11 இடங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதும் அதன் மடிப்பு 8 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து அசையா சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வசம் வந்துள்ளது.
 
தொடர்ந்து இந்த சொத்துக்கள் நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டு, அவை ஏலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் பணத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
துபாயில் பதுங்கல்
 
இந்தநிலையில்,  ஆருத்ரா நிதி நிறுவன மோசடி முக்கிய குற்றவாளியான ராஜசேகர் மகாலட்சுமி  ஆகியோரும்  துபாயில் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது “லுக் அவுட்" நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் துபாயிலிருந்து தப்பிச் செல்லவும் வழியில்லாததால்,  காவல்துறையினர்   இருக்கும் இடத்தை நெருங்கியதாக   தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களை கைது செய்ய "இன்டர்போல்" எனும் சர்வதேச போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
 
இந்த நிலையில்  ராஜசேகர் மற்றும்  மகாலட்சுமி ஆகியோர் குறித்து தகவல்களை சேகரிக்கவும் கைது செய்யவும் துபாய் மற்றும் இந்தியா இடையே உள்ள பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த  ஒப்பந்தம் மூலம் சென்னையில் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அதை துபாய் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
 
அதன் வாயிலாக அந்த நாட்டு போலீசார் ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை  ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போன்று நடிகர் ஆர் கே சுரேஷ் துபாயில்   இருப்பது உறுதி செய்யப்பட்டால்,  அவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget