மேலும் அறிய
சென்னை: பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - பாஜக நிர்வாகி கைது
வடமாநில பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பாஜ பிரமுகரின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்
![சென்னை: பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - பாஜக நிர்வாகி கைது tamil nadu bjp it wing executive arrested for sexually harassing woman staying at home in Chennai சென்னை: பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - பாஜக நிர்வாகி கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/135c12b68cad9f0b8b7b89826133a2f5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பவன்
சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் ரிங்கி என்பவரோடு பேயிங் கெஸ்டாக தங்கியுள்ளார், மும்பையைச் சேர்ந்த 27 வயது மதிக்கதக்க பெண் ஒருவர். இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே கட்டடத்தில் தரைதளத்தில் ரிங்குவின் சகோதரர் பவன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேலை செய்து கொண்டே தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் என்பவருக்கு இந்தி மொழிபெயர்ப்பு மற்றும் அலுவலக உதவியாளராக இருந்து வருகிறார்.
![சென்னை: பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - பாஜக நிர்வாகி கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/7faaa4d054553dfea1022656bbaf4124_original.jpg)
இந்நிலையில் நேற்று தனது சகோதரியுடன் தங்கியுள்ள அந்த பெணை தனது அறைக்கு வருமாறு அழைத்தார் பவன். அப்போது தனது அறையை சுத்தம் செய்யச் சொல்லி பவன் கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் மேலாடைகளை கிழித்த பவன், அவரை சரமாரியாக தாக்கியதுடன் தோள்பட்டை, மார்பு போன்ற பகுதிகளில் கைகளால் சரமரியாக தாக்கியுள்ளார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணுடன் தவறாக நடக்கவும் முயற்சித்ததாக தெரிகிறது.
![சென்னை: பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - பாஜக நிர்வாகி கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/7492fca055f968812d30308bfdd731b9_original.jpg)
இதனையடுத்து அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பவனிடமிருந்து அந்த பெண்ணை மீட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பெண் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சபரினாத் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். பின்னர் பவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சென்னை: பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - பாஜக நிர்வாகி கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/f264b1fd259a2bd56d09621430e14881_original.jpg)
இது குறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, பவன்குமாரின் வீட்டின் மேல் தளத்தில் அவரின் சகோதரி ரிங்கி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையைச்சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிங்கி உடன், பேயிங் கெஸ்ட்டாக தங்கி உள்ளார். இந்த நிலையில் பவன்குமார் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றபோது, வீட்டில் குப்பை இருந்ததால் அந்த 27 வயது பெண்ணை, வீட்டை ஒழுங்காகச் சுத்தம் செய்ய மாட்டியா என மிரட்டி துணியைக்கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார் என அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தஞ்சாவூர்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion