மேலும் அறிய

Suicide : பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

தாய்- தந்தை ஞாபகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை. சேலம் மாவட்டம் தாதம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த செல்வம், சுவிதா தம்பதியர்களின் மகள் பிரகதி (17), சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலவழி கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதியின் தாய், தந்தை நண்பருக்கு ஜாமீன் ஏற்று பணத்தை பெற்றுக் கொடுத்த நிலையில் நண்பர் பணம் கட்டாததால், அந்த பிரச்சினைக்கு பயந்து கணவன்- மனைவி இருவரும் 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டனர். பின்னர் இறந்துபோன செல்வத்தின் சகோதரி பராமரிப்பில் பிரகதி மற்றும் அவரது தம்பி நவதீப் வசித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து நாளை நடைபெறும் பொதுத் தேர்விற்காக பயின்று வந்துள்ளார். 

Suicide : பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

இதனிடையில் இன்று வீட்டிலிருந்து அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் பிரகதி வீட்டிற்குள் சென்று சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றுவிட்டு உறவினர்கள் வீடு திரும்பி பார்த்தபோது, சிறுமி பிரகதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக வீராணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ள நிலையில் அதற்கு பயந்து இறந்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்- தந்தை ஞாபகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget