Crime: பணம் கொடுக்க மாட்டியா? - சுவற்றில் தலையை மோதி தாயை கொடூரமாக கொன்ற மகன்!
நிலத்தை விற்று தனக்கு பங்கு கொடுக்க வேண்டும் என சந்தவ்வாவுக்கு கெடு விதித்த நிலையில் அவர் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது தாயை கொலை செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பணம் கொடுக்க மறுத்த தாயை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, “உயிரிழந்த பெண்ணின் பெயர் சந்த்வா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதான அந்த பெண்ணுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 4 மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணமான நிலையில் மற்றொரு மகனான சந்தோஷ் ஜக்கேரு தாண்டாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து, தனது தாயாரோடு வசித்து வந்தார்.
இதனிடையே மூத்த மகனான குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. பின்னர் போதையில் தனது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாக இருந்துள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் ஜக்கேரு தாண்டா கிராமத்திற்கு பெங்களூருவில் இருந்து குமார் வந்துள்ளார்.
வந்தவுடன் தனது தாய் சந்தவ்வாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். அப்படியான நேற்று (ஜனவரி 26) மாலையும் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் கடும் கோபமடைந்த குமார், தாய் என்றும் பாராமல் சந்தவ்வாவை தரதரவென இழுத்து அடித்து உதைத்தார். தனது வீட்டிற்கு அடுத்துள்ள ஒரு கட்டடத்தின் சுவற்றில் தலையை மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தவ்வா இரத்த வெள்ளத்தில் மயங்கினார். ஆனாலும் ஆத்திரம் தீராத குமார் அங்கிருந்த கல்லை எடுத்து அவர் மீது வீச சம்பவ இடத்திலேயே சந்தவ்வா உயிரிழந்தார்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து ராய்ச்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து குமாரை கைது செய்தனர். சந்தவ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குமாரிடம் நடத்திய விசாரணையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது தந்தையை இழந்த நிலையில் குழந்தைகள் 6 பேரையும் ஒற்றை ஆளாக சந்தவ்வா வளர்த்து ஆளாக்கியுள்ளார். வேலை சென்ற பின் தாயை பராமரிக்கும் பொறுப்புக் கொண்ட மகன் குமார் அதனை செய்யாமல் ரூ.2 லட்சம் கேட்டு தனது தாயாரை துன்புறுத்தி வந்தான். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என சந்தவ்வா மறுத்துள்ளார். இதனால் பெங்களூவில் இருந்து சொந்த கிராமத்துக்கு வந்த குமார், வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தி சண்டையிட்டுள்ளார்.
தன்னிடம் கடைசி மகன் சந்தோஷ் திருமணத்திற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என தாய் கூறியதை குமார் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது தாயை கொலை செய்துள்ளார். முன்னதாக நிலத்தை விற்று தனக்கு பங்கு கொடுக்க வேண்டும் என சந்தவ்வாவுக்கு கெடு விதித்த நிலையில் அவர் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. குமார் தனது தாயை அடித்ததை தட்டிக் கேட்க உள்ளூர் மக்கள் சென்ற போது அவர்களையும் கொன்று விடுவேன் என குமார் மிரட்டியுள்ளான். இதனைத் தொடர்ந்து முத்கல் போலீசார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து சிறையில் அடைத்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















