மேலும் அறிய

சிபிசிஐடி முன் வைத்த வாதம்: சிவசங்கர் பாபா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிசிஐடி முன் வைத்த வாதம்: சிவசங்கர் பாபா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.
 

சிபிசிஐடி முன் வைத்த வாதம்: சிவசங்கர் பாபா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
இந்நிலையில் சிவசங்கர் பாபா மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டு தற்பொழுது சென்னை நீதிமன்ற சிறை காவலில் சிவசங்கர் பாபா இருந்துவருகிறார்.
 
இந்நிலையில் செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மற்றும் ஆசிரியை சுஸ்மிதா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 15ஆம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி இந்த வழக்கை  19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இதனைத் தொடர்ந்து இன்று சிவசங்கர் பாபாவின் ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

சிபிசிஐடி முன் வைத்த வாதம்: சிவசங்கர் பாபா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
சென்னை சிபிசிஐடி போலீசார் தரப்பில் இருந்து , சிவசங்கர் பாபாவின் மீது, தற்போது மூன்று போக்சோ வழக்குகள் உள்ளதால், சிவசங்கர் பாபா  ஜாமீனில் வெளிவரும் பட்சத்தில், ஆதாரங்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என வாதத்தை முன்வைத்தனர். சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சிவசங்கர் பாபா மற்றும் சுஷ்மிதா ஆகிய இருவர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையை மிரட்டும் ரவுடிகளுக்கு ரெட் அலர்ட்: 65 பேரை குண்டாஸில் தூக்கி எஸ்பி மாஸ் ஆக்ஷன்!
மயிலாடுதுறையை மிரட்டும் ரவுடிகளுக்கு ரெட் அலர்ட்: 65 பேரை குண்டாஸில் தூக்கி எஸ்பி மாஸ் ஆக்ஷன்!
நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பெண்... இடையூறாக இருந்த 2 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பெண்... இடையூறாக இருந்த 2 குழந்தைகள் கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
அமைச்சர் வன்னியரசு அவமதிப்பு? கொந்தளித்த வி.சி.க. தொண்டர்கள் - சீர்காழியில் பரபரப்பு‌...
அமைச்சர் வன்னியரசு அவமதிப்பு? கொந்தளித்த வி.சி.க. தொண்டர்கள் - சீர்காழியில் பரபரப்பு‌...
கல்யாணம் செய்ய ஆசைக் காட்டி ரூ.15 லட்சம் மோசடி !! CRPF பெண் காவலர் குடும்பத்துடன் கைது
கல்யாணம் செய்ய ஆசைக் காட்டி ரூ.15 லட்சம் மோசடி !! CRPF பெண் காவலர் குடும்பத்துடன் கைது

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Embed widget