மேலும் அறிய
Advertisement
படப்பை குணாவின் நண்பனை தட்டி தூக்கியது காவல்துறை..! அடுத்தடுத்து கைதில் பரபரப்பாகும் காஞ்சிபுரம்
மணல் கடத்தல் வழக்கில் படப்பை குணாவின் நண்பன் சிவசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் 7 போ், திருவள்ளூரில் 18 போ், காஞ்சிபுரத்தில் 9 போ் என மொத்தம் 34 போ் முதன்மைக் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவா்களைத் தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 போ் உட்பட மொத்தம் 1,894 போ் அடங்கிய பட்டியலையும் காவல்துறையினர் தயார் செய்திருக்கிறார்கள் .
காஞ்சிபுரம் சரகத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகளைப் பிடித்து, குற்றங்களை முழுமையாகத் தடுக்க 36 போ் கொண்ட சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளார்கள். தலைமறைவாகி உள்ள படப்பை குணா விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகள் அடக்கமாகும் பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
குணாவை சுற்றி வளைக்கும் முயற்சியில், அவருடைய வலது கரமாக இருந்து வந்து போந்தூர் சிவா கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல அவருக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆன தென்னரசு ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கூட்டாளி கைது
இந்நிலையில் படப்பை குணா நண்பன், கண்ணன் தாங்கல் பகுதியை சேர்ந்த சிவசங்கர் (41) என்பவர் தனியார் கம்பெனியில் மேன் பவர் சப்ளை செய்து வருகிறார். சுங்குவார்சத்திரம் காவல்நிலைய மணல் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு இருந்த சிவசங்கரை நேற்று சுங்கா சத்திரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படப்பை குணாவிற்கு நெருக்கமாக இருந்த சிவசங்கர் முக்கியமானவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
சேலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion