மேலும் அறிய

Sullan Madan: 2024ல் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி? சினிமா பாணியில் சுள்ளான் மதன்.. அதிர வைக்கும் பின்னணி!

Sullan Madan: சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் நடந்து வந்தாலும் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது சிவகங்கை மாவட்டத்தில் பட்டப்பகலில் சினிமா பாணியில் நடைபெற்ற சுள்ளான் மதன் கொலை சம்பவம் தான். எப்போது ஏரியாவில் நாங்கள் கெத்து என கூறி இன்ஸ்டாகிராமில் பல்வேறு ரீல்ஸ் போட்டு அலப்பறைகள்  செய்து வந்தது சுள்ளான் மதன் கும்பல். 

2024ல் இரட்டை கொலை 

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (எ) சுள்ளான் மதன் (26). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. 2024ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஜெயசூர்யா, சுபாஷ்  சகோதரர்கள் இரட்டை கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சுள்ளான் மதன் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 2026-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

 சுள்ளான் மதன் கொலை

இந்நிலையில் நேற்று பக்கத்து கிராமமான மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுள்ளான் மதன் வந்திருந்தார். அப்போது 5 இருசக்கர வாகனத்தில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுள்ளான் மதன் அவர்களிடம் தப்பிக்க ஓடியுள்ளார். அந்த கும்பலும் அவரை விடாமல் பயங்கர ஆயுதங்களுடன் சினிமா பாணியில் விரட்டி சென்றது. கருப்பு தோட்டத்துக்குள் சென்று எப்படியாவது தப்பித்து விடலாம் என்ற அவரை சுற்றி வளைத்து சல்லி சல்லியாக வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. 

அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

மஞ்சுவிரட்டு நடைபெற்ற பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கரும்புத் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சுள்ளான் மதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்களும் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டதை அடுத்து எந்த அசம்பாவிதமமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: மனைவிக்கு 18.. கணவருக்கு 40... வயது வித்தியாசத்தால் தீராத சந்தேகம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!

பழிக்கு பழி

ரவுடி சுள்ளான் மதனை வெட்டிக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் பாபு (23), பாலமுருகன், பிரதீப் (28) ஆகிய 3 பேர் கைது செய்யப்படுகின்றனர். மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  2024-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயசூர்யா, சுபாஷ் இரட்டையர்கள் கொலைக்கு பழிதீர்க்கவே இந்த கொலை நடைபெற்றதா என விசாரணை நடைபெறுகிறது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: நகைகள் மற்றும் பைக் பறிமுதல்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது: நகைகள் மற்றும் பைக் பறிமுதல்!
மனைவி, மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கோரப் பின்னணி!
மனைவி, மகனை அடித்துக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் கோரப் பின்னணி!
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய முதியவர்; குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீசார்.. 
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய முதியவர்; குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீசார்.. 
என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget