மேலும் அறிய

பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

சிவகங்கையில் ஜாமீனில் வந்த ரவுடி பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுள்ளான் மதன். இவர் மீது இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டி போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனை காண சமீபத்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த ரவுடி சுள்ளான் மதன் வந்திருந்தார். 

சுள்ளான் மதன் கொலை

அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சுள்ளான் மதனை சுத்துப்போட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்றது. பின்னர் கரும்பு தோட்டத்துக்குள் சென்ற அவரை விடாமல் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த  சுள்ளான் மதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. 

இதையும் படிங்க: ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!

போலீஸ் குவிப்பு

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுள்ளான் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என மருத்துவமனை முன்பு குவிந்து உள்ளதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்விரோதம் காரணமா கொலை?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரம்" வாலிபரை சரமாரியாக குத்திக் கொன்ற பெண்ணின் தந்தை
"நடத்தை சரியில்லை" என நண்பர்கள் சொன்னதால் விபரீதம் - 24 வயது இளம்பெண்ணை வெட்டிச் சாய்த்த கணவன்
காதலிக்கலனா பெட்ரோல் ஊற்றி கொளுத்துவீங்களா? பொதுமக்கள் இல்லனா என்னவாயிருக்கும்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்
காதலிக்கலனா பெட்ரோல் ஊற்றி கொளுத்துவீங்களா? பொதுமக்கள் இல்லனா என்னவாயிருக்கும்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு விவகாரம்: சிறுவனின் அவசரச் செயலால் ஏற்பட்ட குழப்பம் - காவல்துறை விளக்கம்
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு விவகாரம்: சிறுவனின் அவசரச் செயலால் ஏற்பட்ட குழப்பம் - காவல்துறை விளக்கம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget