Crime: காதலி தற்கொலை வழக்கில் நண்பனை சிக்கவைத்து தப்பிய காதலன் - 3 மாதங்களுக்கு பிறகு கைது
சீர்காழி அருகே கடந்த ஜனவரி மாதம் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நண்பனை சிக்க வைத்து தப்பிய காதலன் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே கடந்த ஜனவரி மாதம் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நண்பனை சிக்க வைத்து தப்பிய காதலன் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைரவனிருப்பு பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சுகன்யா. இவர் கடந்த ஜனவரி மாதம் 4 -ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் 5 -ஆம் தேதி சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை முடிந்த நிலையில் சுகன்யாவின் தற்கொலைக்கு பைனான்சியர் வினோத் என்பவர்தான் காரணம் என கூறி வினோதை கைது செய்யக்கோரி பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து பைனான்சியர் வினோத்தை சீர்காழி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இறந்த சுகன்யாவின் செல்போனை ஆய்வு செய்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணின் தற்கொலைக்கு அவரது காதலன் ஜான்டிரோட்ஸ்தான் காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனை தொடர்ந்து செல்போன் பதிவுகளுடன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் சுகன்யாவின் பெற்றோர் சுகன்யாவின் காதலர் ஜான்டிரோட்ஸ் மீது புகார் அளித்தனர்.
அதன் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சுகன்யாவின் தற்கொலைக்கு காதலன் ஜான்டிரோட்ஸ்தான் காரணம் என்பதும், தனது நண்பனும் பைனான்சியருமான வினோத்திடம் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாததால் நண்பன் என பாராமல் வினோத்தை சுகன்யாவின் தற்கொலை வழக்கில் சிக்கவைத்ததுடன் உறவினர்களை தூண்டிவிட்டு சாலைமறியலிலும் ஈடுபட்டது தெரியவந்தது.
TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
இதனையடுத்து ஜான்டிரோஸ்சை கைது செய்த கொள்ளிடம் காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க கூடாது என நண்பனையே தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிக்கவைத்த சம்பவம் சீர்காழி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்