மேலும் அறிய
Advertisement
Chennai Airport : கடத்தப்பட்ட பாம்புகள், குரங்கு, ஆமைகள்.. சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட விஷமற்ற 20 பாம்புகள், 2 ஆமைகள், ஒரு குரங்கு சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட விஷமற்ற 20 பாம்புகள், 2 ஆமைகள், ஒரு குரங்கு சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.ராமநாதபுரத்தை சோ்ந்த கடத்தல் ஆசாமியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை. மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகள்,அந்த விலங்குகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு. அதற்கான செலவை கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்கவும் ஏற்பாடு.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காகிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த முகமது ஷகீல் (21) என்ற பயணி மீது, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்பொழுது அவர் வைத்திருந்த பெரிய கூடையை சந்தேகத்தில் திறந்து பார்த்து சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெரிய கூடைக்குள் உள்ள தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவர்கள் கடத்தி வரப்பட்டிருந்தன. இதை எடுத்து சுங்கு அதிகாரிகள் அந்தப் பயணியை தனியே நிறுத்தி வைத்தனா். அதோடு சென்னையில் உள்ள மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சோதனையிட்டனா்.
வட அமெரிக்கா நாட்டில் உள்ள கிங் ஸ்நேக் (King Snake) என்ற விஷமற்ற பதினைந்து பாம்புகளும், மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் என்ற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் சேஷல்ஸ் தீவில் அதிகம் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற ஒருவகை ஆமை வகைகள் 2, மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1, மொத்தம் 23 விலங்குகள் இருந்தன.
இதை அடுத்து அந்த கடத்தல் ஆசாமியிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு, அங்கு தங்கி இருந்துவிட்டு, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்துள்ளார் என்று தெரியவந்தது. இவற்றை எதற்காக வாங்கி வந்தார்? என்று எதுவும் தெரியவில்லை. இது விஷமற்ற பாம்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் இவைகளை கொண்டுவரும்போது, முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் பெற்று, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்தேகொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கடத்தல் ஆசாமியிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை இவர் எதற்காக கொண்டு வந்தார்? ஏதாவது யாரையாவது பயமுறுத்துவதற்காகவா? இல்லையேல் சர்க்கஸ் போன்றவைகளில் பயன்படுத்துவதற்காக, எடுத்து வந்தாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion