சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கர் மருமகன் உட்பட 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ..
Director Shankar Son In Law Rohith Damodaran: கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கர் மருமகன் உட்பட 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ.. Sexual harassment of a girl who went to cricket training: A case has been registered against 5 persons including director Shankar's son-in-law சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கர் மருமகன் உட்பட 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/2cad5e5b695b1fd0cfb9fcab0b591e07_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர், இயக்குனர் சங்கரின் மருமகன் ரோஹிட்(Rohith Damodaran) உள்ளிட்ட 5 பேர் மீது போஸ்கோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் உள்ளது. இங்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சோரப்பட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன் பயிற்சியாளராக உள்ளார். இவர், கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
அப்போது பயிற்சியில் ஈடுபட்ட 17 வயது மாணவியிடம் கிரிக்கெட் வீரர் தாமரைக் கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அச்சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிப்பவரை அனுசரித்து செல்லுமாறு கூறியுள்ளனர் மேலும் சிறுமியின் புகாரை கண்டு கொள்ளவில்லை இந்த நிலையில் அச்சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நல குழு விடும் புகார் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிறுமிக்கு பயிற்சியளித்த கிரிக்கெட் வீரர் தாமரை கண்ணன் மீது பாலியல் சீண்டல் பிரிவின் கீழும் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், அப்போதைய்ம் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் செயலாளர் வெங்கட் கிரிக்கெட் கிளப் கேப்டன் திரைப்பட இயக்குனர் சங்கர் மருமகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ பிரிவின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோகித் விளையாட்டு அணியின் கேப்டனாகவும் உள்ளார், சமிபத்தில் இயக்குனர் சங்கர் மகளுடன் ரோகித்துக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை மற்றும் கொள்ளை விபச்சாரம் போன்றவை கடந்த சில மாதங்களாக தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது இதனால் புதுச்சேரி வாழும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)