மேலும் அறிய
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Madurai NTK Murder: மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Source : abp
Madurai NTK Murder: மதுரையில் அமைச்சரின் வீட்டருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை காவல்துறையினர் தீவிர விசாரணை பொதுமக்கள் அதிர்ச்சி.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அமைச்சர் வீட்டு அருகே சாலையில நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் பாலசுப்ரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர்.
அப்போது ”காப்பாற்றுங்கள்” எனக்கூறி பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் மர்ம கும்பலானது திடீரென அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது தெரியவருகிறது. இதில் படுகாயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கொலை
இதனையடுத்து படுகாயங்களுடன் வந்த பாலசுப்ரமணியன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்குழாய்விற்காக எடுத்துச் சென்றனர் மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையிலும் அமைச்சர் வீட்டில் முன்பாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையிலும் வாக்கிங் சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவழக்குகள் நிலுவை
இந்நிலையில் இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் மீது சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் கமிஷனர் நேரடி விசாரணை
நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரடியாக விசாரணை நடத்துகிறார் என்பது கூடுதல் தகவல்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
வணிகம்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion