மேலும் அறிய

CM Stalin: காவிரி விவகாரம் - தொடங்கியது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

CM Stalin: காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க,  தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

CM Stalin: தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது:

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே. மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், விசிக சார்பில் திருமாவளவன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு தொடர்பாக அனைவரையும் கலந்தாலோசித்து,  சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு:

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC  அமைப்பு ஆணையிட்டது. ஆனால், அந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.  ஆணையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியது. ஆனால், தமிழ்நாட்டிற்கு நாளொன்றிற்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், தற்போதைய சூழலில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.  இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது” என முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SSLV D3: வெற்றி! வெற்றி! விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட்!
SSLV D3: வெற்றி! வெற்றி! விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட்!
Breaking News LIVE, AUG 16: கட்சி விதிகளில் மாற்றமா? தொடங்கியது அதிமுக அவரசர செயற்குழு கூட்டம்
Breaking News LIVE, AUG 16: கட்சி விதிகளில் மாற்றமா? தொடங்கியது அதிமுக அவரசர செயற்குழு கூட்டம்
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
Stock Market:ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கடைசி வரிசையில் ராகுல்..செங்கோட்டையில் அவமதிப்பா? வெடித்த சர்ச்சை!Suyasakthi Virudhugal 2024 | சிம்ரன் முதல் கனிமொழி வரை!விருது பெற்ற பிரபலங்கள்..Khushbu resigns from NCW | ”ரீஎண்ட்ரி குடுக்க ரெடி” குஷ்பு ராஜினாமா! காரணம் என்ன?Udhayanidhi stalin | உதயநிதிக்காக கிடா விருந்து! உருகி வேண்டிய கவுன்சிலர்! படையெடுத்த மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SSLV D3: வெற்றி! வெற்றி! விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட்!
SSLV D3: வெற்றி! வெற்றி! விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட்!
Breaking News LIVE, AUG 16: கட்சி விதிகளில் மாற்றமா? தொடங்கியது அதிமுக அவரசர செயற்குழு கூட்டம்
Breaking News LIVE, AUG 16: கட்சி விதிகளில் மாற்றமா? தொடங்கியது அதிமுக அவரசர செயற்குழு கூட்டம்
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!
Stock Market:ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!
இதயமே இல்லை! தமிழ்நாட்டுக்கு பிச்சை போட்டிகிறார்கள்: டி.ஆர்.பாலு பரபர அறிக்கை!
இதயமே இல்லை! தமிழ்நாட்டுக்கு பிச்சை போட்டிகிறார்கள்: டி.ஆர்.பாலு பரபர அறிக்கை!
Election: மகாராஷ்ட்ரா, ஹரியானா, காஷ்மீருக்கு தேர்தல் எப்போது? இன்று தேதி அறிவிப்பு
Election: மகாராஷ்ட்ரா, ஹரியானா, காஷ்மீருக்கு தேர்தல் எப்போது? இன்று தேதி அறிவிப்பு
Kolkatta Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையில் ஆதாரம் அழிக்கப்பட்டதா? காவல்துறை பதில் இதுதான்
Kolkatta Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையில் ஆதாரம் அழிக்கப்பட்டதா? காவல்துறை பதில் இதுதான்
ஸ்டிரைக்! நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - இதுதான் காரணம்
ஸ்டிரைக்! நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - இதுதான் காரணம்
Embed widget