மேலும் அறிய

உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !

இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது - என நீதிபதி வேதனை.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.

சாத்தான்குளம் வழக்கு
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்
 
இவர்கள் பத்துப் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
 
நீதிபதி கருத்து
 
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனையை அறிவிக்கும் முன்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். "இருவரையும் கொல்லும் நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எதுபோன்ற தண்டனை அளிக்கலாம் எனக் கேட்டபோது, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மத்திய அரசு கூறியது. அதேபோல, தமிழக அரசும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கூறியது.'' என நீதிபதி கூறினார்
 
இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றார் நீதிபதி.
 
''இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்துசொல்ல முடியாது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் திருந்தவில்லை. கொரோனா காலகட்டத்தில் கடையைத் திறந்து வைத்தார்கள் என்பதற்காக இப்படித் தாக்கியிருக்கிறார்கள். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக விசாரித்திருக்காவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.'' ''நிராயுதபாணியாக நின்றவர்களை இவர்கள் தாக்கியுள்ளனர். இவர்களை மன்னிக்க வேண்டியதில்லை. வயது, குடும்ப சூழலை காரணம் காட்டி இவர்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் நல்ல மன நிலையில் இதனைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை அவர்களைத் தாக்கியுள்ளது.'' என நீதிபதி கூறினார் இந்தச் செயலைப் பார்க்கும்போது மனம் வெந்து போகிறது என கூறிய அவர், ''பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது.'' என்றார்
 
இது அரிதினும் அரிதான வழக்கு என நீதிபதி கூறினார்
 
''இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என எதிரிகள் நினைக்கலாம். ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை" என்று தெரிவித்த நீதிபதி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார். அதன்படி முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, பல சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறை, 3 ஏழாண்டு சிறை, மூன்றாண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 24,10,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை மரண தண்டனையும் 16,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை தூக்கு தண்டனையும் 5,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான தலைமைக் காவலர் முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 10,00,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 5,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை, மூன்று ஏழாண்டு சிறை தண்டனை, ஒரு மூன்றாண்டு சிறை தண்டனை, இரட்டை மரண தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 3,30,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 14,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
ஒன்பதாவது குற்றவாளி வெயில் முத்துவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 1 கோடியே 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அபராதத்தை வழங்கிடக்கோரி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget