மேலும் அறிய

ஹெட் மசாஜ் செய்ய சென்ற 16 வயது சிறுமி: சிலுமிஷம் செய்த சலூன் கடைக்காரர் - சிக்கியது எப்படி?

டெல்லியில் சிறுமியிடம் சிலுமிஷம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் சிறுமியிடம் சிலுமிஷம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் தன் கடையில் தலை மசாஜ் செய்துகொள்ள வந்த 16 வயது சிறுமியை தவறான முறையில் சீண்டியுள்ளார்.

அப்போது பயத்தில் அமைதியாக இருந்துவிட்ட சிறுமி பின்னர் வீட்டுக்குச் சென்றதும் தன் தாயிடம் நடந்ததைச் சொல்லி புலம்பியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் சலூன் கடைக்குச் சென்று சண்டையிட்டுள்ளனர். அப்போது அந்த நபர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.  இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

குழந்தையின் நலனே பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்

வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும்.  அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி,சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும்.  அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது. இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.

குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவுசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்,உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.

வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக்கூடாது. குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது. என பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனை பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்.
 

தலைப்பு செய்திகள்

Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Embed widget