மேலும் அறிய

Crime: ஆன்லைனில் எலிபேஸ்ட் ஆர்டர்.. விபரீத முடிவெடுத்த பெண் வங்கி அதிகாரி.. நடந்தது என்ன?

சேலம் அருகே ஆசிரியருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை மனைவி கண்டித்ததால் வங்கி பெண் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே ஆசிரியருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை மனைவி கண்டித்ததால் வங்கி பெண் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் 30 வயதான அனிதா. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளாராக பணிபுரிந்து வந்துள்ளார். இதன் காரணமாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் விடுதி வாழ்க்கை வெறுத்த அனிதா, கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகாபுரம் காட்டூதீரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், கடந்த 8ம் தேதி எலிபேஸ்டை அனிதா சாப்பிட்டுள்ளார். தகவலறிந்து அனிதாவின் பெற்றோர் அந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவரின் உடல்நிலை மோசமானதால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனிதா சிகிச்சை பெற்று வந்தநிலையில், பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இதுகுறித்து சேலம் அழகாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. 

முன்னதாக, அனிதா தர்மபுரியில் பணியாற்றியபோது காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடையில் இவர்கள் பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அந்த பள்ளி ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பேர் உள்ளனர். அதில் ஒருவர் மருத்துவமும் படித்து வந்துள்ளார். 

முன்னதாக, அனிதாவிற்கு பள்ளி ஆசிரியருக்கு ஏற்பட்ட பழக்கம் குறித்து அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தனது கணவனை மீட்டு தர வேண்டும் என்று, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

 அதன் காரணமாகவே, அனிதா வாழப்பாடிக்கு இடமாற்றம் பெற்று வந்து விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். அங்கு வந்தும் அந்த ஆசிரியரின் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கடந்த 8 ம் தேதி எலிபேஸ்ட்டை வாங்கி தின்று தற்கொலை செய்து கொண்டார். 

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கான காரணங்கள் : 

தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மாநிலம்வாரியாக தற்கொலை விவரம் : 

மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)

அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget