மேலும் அறிய

கொடநாடு கொலை வழக்கு: சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

ஆத்தூரில் உயிரிழந்த ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் செல்போனில் யாரிடம் பேசியுள்ளார், யாரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது குறித்தும் சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு, எஸ்டேட்டுக்கு உள்நுழைந்த மர்ம கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று அங்குள்ள அறைகளை உடைத்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர். அச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். 

கொடநாடு கொலை வழக்கு: சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான், அவரது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். சயான் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கினை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் திடீரென கொடநாடு வழக்கு விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தனிப்படையில் சேர்க்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தார். 

கொடநாடு கொலை வழக்கு: சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

இந்த நிலையில் சேலம் மாநகர சைபர் கிரைமில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் சில காவலர்கள் கொடநாடு வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இவர்களும் விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சைபர் க்ரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தமிழகம் முழுதும் தேர்வு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கொடநாடு பகுதியில் உள்ள செல்போன் டவரில் கொலை சம்பவம் நடந்த அன்று யார் யாரிடம் பேசி உள்ளானர் என தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டம் ஆத்தூரில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் செல்போனில் யாரிடம் பேசியுள்ளார், யாரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது குறித்தும் சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள இந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி காவல் துறையினர் ஒரு பிரிவாகவும், சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றொரு பிரிவாகவும் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனால் கொடநாடு கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Stampede: மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி பலி, நாலந்தா கோயிலில் நேர்ந்த சோகம்
Bihar Stampede: மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் - 8 பெண் பக்தர்கள் மூச்சு திணறி பலி, நாலந்தா கோயிலில் நேர்ந்த சோகம்
Seeman Assets: அதிரவிட்ட சீமான்..! 25 ஏக்கர் 51 லட்சம் மட்டும்தானா? கணவருக்கு பேக்-அப்பாக வந்த மனைவி கயல்விழி
Seeman Assets: அதிரவிட்ட சீமான்..! 25 ஏக்கர் 51 லட்சம் மட்டும்தானா? கணவருக்கு பேக்-அப்பாக வந்த மனைவி கயல்விழி
E20 Petrol Issues: இது என்னடா சோதனை.! E20 பெட்ரோலால் பழைய வாகனங்களுக்கு இவ்வளவு சிக்கலா.? தீர்வுகள் என்ன.?
இது என்னடா சோதனை.! E20 பெட்ரோலால் பழைய வாகனங்களுக்கு இவ்வளவு சிக்கலா.? தீர்வுகள் என்ன.?
Trump Iran War: ”ஹார்மஸ் கூட வேண்டாம்யா, பேசி போரை முடிச்சுக்க ரெடி” ஈரானை ஐரோப்பா தலையில் கட்டும் ட்ரம்ப்
Trump Iran War: ”ஹார்மஸ் கூட வேண்டாம்யா, பேசி போரை முடிச்சுக்க ரெடி” ஈரானை ஐரோப்பா தலையில் கட்டும் ட்ரம்ப்
Iran War Trump Video: ‘அடி எப்படி.?‘; ஈரானின் இஸ்ஃபஹானில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்
‘அடி எப்படி.?‘; ஈரானின் இஸ்ஃபஹானில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்
Top 10 News Headlines: முதலமைச்சர் வாகனத்தில் சோதனை, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அல்வா, ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ
முதலமைச்சர் வாகனத்தில் சோதனை, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அல்வா, ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ - 11 மணி செய்திகள்
GOLD SILVER RATE Mar. 31: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.! ரூ.5,000 சரிவு; தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.! ரூ.5,000 சரிவு; தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
Tamilnadu Round Up: சுங்கக் கட்டணம் உயர்வு, பாஜக வேட்பாளர்கள் யார்? திமுகவை சாடும் தவெக - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: சுங்கக் கட்டணம் உயர்வு, பாஜக வேட்பாளர்கள் யார்? திமுகவை சாடும் தவெக - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget