Crime: அதிர்ச்சி... 3 வயது குழந்தை கொடூர கொலை.. தாயின் கள்ளக்காதலன் கைது
சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாநகர் குகை பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (26) என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா (25) இவர்களுக்கு வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவுக்கும் பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் சண்முகப்பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரை விட்டுவிட்டு தமிழரசன் உடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இதனிடையே மது போதையில் இருந்த தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா இருவரும் சேர்ந்து மூன்று வயது சிறுவன் வெற்றிமாறன் அழுததால் ஆத்திரத்தில் இருந்த தமிழரசன் சிறுவனை கண்மூடித்தனமாக கொடூரமான முறையில் தாக்கியதாக மற்றொரு சிறுவனான வெற்றிவேல் கூறினார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உறவினர்கள் புகாரை அடுத்து தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழரசன் குழந்தையை தாக்கியது உறுதி செய்யப்பட நிலையில் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, இன்றைய தினம் சிகிச்சையில் இருந்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உயிரிழந்தது. இதனால் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குழந்தையின் தாயார் சண்முக பிரியாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து பசுபதியின் சகோதரி கூறுகையில், எனது சகோதரன் பசுபதி மற்றும் சண்முகப்பிரியா திருமணம் செய்து கொண்டு அவ்வப்போது குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் பிரிந்த நிலையில் பசுபதியின் இரண்டாவது மகன் வெற்றிமாறனை கடுமையாக தாக்கி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்துள்ளார். பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது. எனவே முதல் குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதுகுறித்து ஆறு வயது சிறுவன் வெற்றிவேல் கூறுகையில், எனது அப்பா தமிழ் எனது தம்பியை அடித்தார் என மழலை வார்த்தையில் பேசியது அருகில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது.
மூன்று வயது சிறுவனை தாயின் கள்ளக்காதலர் கொடூரமாக தாக்கி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

