Crime: பொதுத்தேர்வுக்கு படிக்க விடாமல் பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை மீது சிறுமி புகார்
படிப்பதற்கும் தங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் மல்க பேட்டி.
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், சேலம் மாவட்டம் கோரிமேடு சின்ன கொல்லபட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தனது வளர்ப்பு தந்தை மற்றும் வீட்டில் வசிக்கும் மற்றொரு நபர் பொதுத்தேர்வுக்கு படிக்க விடாமல், இரவு நேரங்களில் குடிபோதையில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு தருவதாக புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறுமி கூறுகையில், “நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அதிமுக பிரமுகர் சண்முகம் தத்து எடுத்தார். தத்து எடுத்த நாள் முதல் சரிவர உணவு வழங்காமல் அவ்வப்போது திட்டி வந்தே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக வளர்ப்பு தந்தையான சண்முகம் வீட்டில் குடியிருக்கும் மணி என்பவரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசியும், பாலியல் தொந்தரவு செய்கின்றனர். இது குறித்து தாய் கேட்க சென்றாள் தாயையும் மிரட்டுகிறார்கள். இந்த நிலையில் வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் வேளையில் எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது அருந்திவிட்டு பாலியல் தொந்தரவு செய்வதால் என்னால் சரிவர படிக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வசிப்பதற்கும் படிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறினார்.
பாலியல் தொந்தரவு தரும் வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுமி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்