மேலும் அறிய

சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்... காதலியை காதலிகளுடன் கொன்ற காதலன் - நடந்தது என்ன?

திருமணம் செய்ய வற்புறுத்திய ஒரு காதலியை, இரண்டு காதலிகளின் உதவியுடன் விஷஊசி செலுத்தி கொலை செய்த பயங்கரம்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதியில் லோகநாயகி என்ற இளம்பெண் தங்கி அருகில் இருக்கும் நீட் கோச்சிங் சென்டரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக லோகநாயகி பெண்கள் விடுதிக்கு வரவில்லை என்று கூறி, பெண்கள் விடுதியின் வார்டன் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காணவில்லை என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக லோகநாயகியின் செல்போன் எண்ணை பரிசோதனை செய்து பார்த்தபோது கடைசியாக ஏற்காடு மலைப்பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. பின்னர் லோகநாயகி யாருடன் செல்போனில் பேசி உள்ளார் என்பது குறித்து சோதனை செய்து பார்த்தபோது அப்துல் ஹபீஸ் என்ற வாலிபருடன் அதிக நேரம் செல்போனில் பேசி உள்ளார். மேலும் இறுதியாக இவரிடம் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்துல் ஹபீஸ், லோகநாயகியின் காதலர் என விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைப் பிடித்து வந்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். 

அதில், அப்துல் ஹபீஸ், லோகநாயகி மட்டுமில்லாமல் மோனிகா மற்றும் தாவியா சுல்தானா ஆகிய மூன்று பெண்களையும் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் லோகநாயகி, அப்துல் ஹபீஸை விட வயது அதிகமானவர். இந்த நிலையில் லோகநாயகி அப்துல் ஹபீஸை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். லோகநாயகி தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் நிலையில் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக அவரது மற்ற இரண்டு காதலிகள் உதவியை நாடி உள்ளார். விஷ ஊசி செலுத்தி கொலை செய்து விடலாம் என்ற திட்டம் தீட்டி நர்சிங் மாணவியான மோனிகா உதவியுடன் சேலம் ஏற்காடு மலைப்பகுதிக்கு அழைத்து சென்று விஷ ஊசியை செலுத்தி லோகநாயகியை கொலை செய்துள்ளனர். இதையடுத்து லோகநாயகி உடலை சேலம் ஏற்காடு மலைப்பகுதியில் வீசிவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்டு வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். 

சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்... காதலியை காதலிகளுடன் கொன்ற காதலன் - நடந்தது என்ன?

இந்த நிலையில் வாலிபர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்துல் ஹபீஸ்சின் மற்ற இரண்டு காதலிகளையும் கைது செய்து சேலம் ஏற்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்துல் ஹபீஸ் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் நான்காம் ஆண்டு மாணவன், காவியா சுல்தானா தனியார் வங்கியில் ஊழியர், மற்றொரு காதலை மோனிகா நர்சிங் கல்லூரி மாணவி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் உடல் ஏற்காடு மலைப்பகுதியில் மீட்கப்பட்டதால் சேலம் ஏற்காடு காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் கொலை செய்யப்பட்ட லோகநாயகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அப்துல் ஹபீஸ், தாவியா சுல்தானா, மோனிகா ஆகிய மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண்ணை காதலிகளுடன் கொலை செய்த காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
7 பேர் உயிரிழப்பு: தகுதியற்ற அரசுப் பேருந்துகளால் வந்த வினை! - திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்...!
7 பேர் உயிரிழப்பு: தகுதியற்ற அரசுப் பேருந்துகளால் வந்த வினை! - திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்...!
மாற்று சமூக காதல் திருமணம்! மாமனார் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் ஆம்பூர்
மாற்று சமூக காதல் திருமணம்! மாமனார் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் ஆம்பூர்
58 பெண்கள் வாழ்க்கை நாசம்.. ஆபீஸில் ஆபாசம்.. பென் டிரைவால் சிக்கிய பிரபல ஜோதிடர்!
58 பெண்கள் வாழ்க்கை நாசம்.. ஆபீஸில் ஆபாசம்.. பென் டிரைவால் சிக்கிய பிரபல ஜோதிடர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
‘அதிமுகவுடன் ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
‘ரகசிய கூட்டணி, உள்ளடி வேலை’ காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Embed widget