மேலும் அறிய

மாற்று சமூக காதல் திருமணம்! மாமனார் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் ஆம்பூர்

ஆம்பூர் அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த பேரனின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்.

 

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த பேரனின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட  மருமகளை நுங்கு வெட்டும் கத்தியால் மாமனார் வெட்டிய படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க சென்ற மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்பு. இவர் சென்னையில் பணியாற்றி வந்த போது, தன்னுடன் பணியாற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணான, பிரதீபா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு, பாலூர் பகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வந்து நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அபிமன்பு மாற்று சமூக பெண்ணை, காதல் திருமணம் செய்துக்கொண்டது பிடிக்காமல், அபிமன்யுவின், தந்தையான முனியன் மற்றும், முனியனின் மூன்றாவது மனைவியான கவிதா ஆகியோர், அடிக்கடி பிரதீபாவை தாக்கி, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து உமராபாத் காவல்நிலையத்தில், வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நேற்று இரவு அபிமன்யு, நுங்கு வியாபாரத்திற்காக வெளியூர் செல்வதால், தனது தாத்தாவான சாமுண்டி என்பவரை தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பிற்காக இருக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் கவிதா, பிரதீபாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை சாமுண்டி தடுக்க சென்றுள்ளார். ஆனால் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சாமுண்டி, நுங்கு வெட்டும் கத்தியால் கவிதாவின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதனை தடுக்க சென்ற முனியனுக்கும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, உமராபாத் காவல்துறையினர், சாமுண்டி மற்றும் முனியனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார், நுங்கு வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget