மேலும் அறிய

Crime:சேலம் மத்திய சிறையில் கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்.

கடந்த மாதத்தில் மட்டும் சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வாரத்தில் 5 நாட்கள் உறவினர்கள் சந்திக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளை 3 நாட்களும், தண்டனை கைதிகளை 2 நாட்களும் பார்க்க முடியும். அப்போது அவர்களுக்கு தேவையான பழங்கள், பிஸ்கெட்டுகளை உறவினர்கள் வழங்குவார்கள்.

அதேநேரத்தில் முன்பு கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் பார்த்தாலும் 5 அடி தூரத்தில் கம்பி வலைக்கு பின்னால் நின்று தான் பார்க்க முடியும். அதுவும் கைதிகள் பேசுவது உறவினர்களுக்கும், உறவினர்கள் பேசுவது கைதிகளுக்கும் கேட்காது. மனு பார்க்கும் இடத்தில் ஒரே சத்தமாக இருக்கும். இந்ததுயரத்தை போக்கும் வகையில் இன்டர்காம் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மனு பார்க்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டே இன்டர்காம் மூலம் தெளிவாக பேசலாம். அதே போல வீடியோகால் மூலமும் குடும்பத்தினருடன் பேசும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

Crime:சேலம் மத்திய சிறையில் கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்.

இத்தனை வசதியையும் தாண்டி கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. சமீப காலமாக சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு சிறைக்கு வரும் கைதிகள் ஆசன வாய் வழியாக செல்போனை கடத்தி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்ற சம்பவம் 10 நாட்களில் மூன்றாவது முறையாக சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி காலை 6 மணியளவில் குமரகுரு என்ற கைதியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் சிறை வார்டன்கள் அவரை கண்காணித்தனர். அவர் காலை தூக்கி தூக்கி வித்தியாசமாக நடந்தார். அவரை தூக்கிகொண்டு சென்ற வார்டன்கள் ஜெயிலர் அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர், ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். இது குறித்து ஜெயிலர் மதிவாணனுக்கு தகவல் தெரிவித்து அவர் வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் உள்ளே இருந்த செல்போனை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கழிவறைக்கு தூக்கிச் சென்று எடுக்க வைத்தனர். முக்கால் மணி நேரத்திற்கு பிறகு கேரிபேக்கில் சுற்றப்பட்ட சிறிய செல்போன் ஒன்று வெளியே வந்தது.

Crime:சேலம் மத்திய சிறையில் கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்.

இந்த செல்போனை பத்திரமாக எடுத்து கழுவினர் தொடர் விசாரணையில் மதுரையை சேர்ந்த கொலை வழக்கு கைதி தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை பத்திரமாக ஆசனவாயில் வைக்குமாறு கூறியதாக அதிகாரிகளிடம் கைதி குமரகுரு தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கு கைதியை அதிகாரி ஒருவர் ரகசியமாக விசாரித்தார், இவ்வாறு செல்போன் பறிமுதல் செய்யப்படும்போது, அதனை கொடுத்தவருக்கும் தண்டனையாக ஒருமாதம் தனியறையில் அடைக்கப்படுவது வழக்கம். உறவினர்களையும் பார்க்க அனுமதி கிடையாது. இது சிறை விதியில் உள்ளது. ஆனால் கைதி குமரகுருவை மட்டும் தனியறையில் வைத்த அதிகாரிகள், கொலை வழக்கு கைதிக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை. 

இதே போன்ற சம்பவம் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி மீண்டும் சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்ற வழிப்பறிக்கை நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் அவரை பிடித்து விசாரித்தபோது தன் ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை எடுத்து அவரை கழிவறைக்கு தூக்கிச் சென்ற சிறை காவலர்கள் அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கவரின் சுற்றி வைத்திருந்த செல்போனை மீட்டனர். இதனை இன்னொரு கைதியான ராஜ்குமார் கொடுத்ததாக விசாரணையில் பிரவீன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த மாதத்தில் மட்டும் சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிறை சோதனைக் குழுவினர் ஒன்றாவது பிளாக்கில் உள்ள கைதிகளிடம் சோதனை நடத்தினர். இதில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற கைதி. ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த ஒரு செல்போன், இரண்டு பேட்டரி, ஒரு சிம்கார்டு மற்றும் ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த காவலர்கள், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் தொடர்ச்சியாக கைதிகளின் ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget